search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை செயலாளர்"

    • ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாஆய்வு செய்தார்.
    • வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஈரோட்டுக்கு வந்தார்.

    இன்று காலை அவர் காளை மாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி மூலம் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். வணிக வளாகத்திற்குள் சென்று பணி குறித்து கேட்டு அறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சோலாரில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட வரும் பஸ் நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நகர் நல அலுவலர் பிரகாஷ், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
    • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

    சென்னை:

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

    சென்னை வேளச்சேரி, தரமணி, உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

    இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும். இது குறித்து கடந்த மார்ச் 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

    இதுபோன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை.

    எனவே, ஐகோர்ட்டு உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன், கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.

    சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது.

    அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாட்களுக்கு தள்ளி வைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும்.
    • கட்டிடம் மற்றும் இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற 13-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதால் பள்ளிகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும்

    வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். கதவுகள் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆய்வரங்குகளில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    கட்டிடம் மற்றும் இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

    எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.

    பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

    தன்னார்வலர்கள் வந்தாலும் தூய்மை பணிக்கு சேர்த்துக் கொள்ளலாம். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது.

    பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே.

    பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள்.

    இது போன்று சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தலைமை செயலாளர் இறையன்பு எழுதி உள்ளார்.

    ×