search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தராசுகள்"

    • கடைகளில் காலாவதியான எலக்ட்ரானிக் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் வழங்கப்படும் மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளின் எடை அளவுகள் குறைவாக இருப்பதாக பொதுமக்களி டம் இருந்து மாவட்ட தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறையின் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மைவிழி செல்வி உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் வீரசோழன் பகுதிகளில் உள்ள மீன், கோழி, மட்டன் கடைகளில் தொழிலாளர் துறை ஆய்வாளர் சதாசிவம், உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் தலைமையி லான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தராசுகளில் சரியான அளவு காட்டுகிறதா? என சோதனையிட்ட அதிகாரி கள் தாங்கள் கொண்டு வந்த எடைக்கற்கள் தராசு களில் வைத்து அளவுகளை சரிபார்த்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கடைக்கு இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம் கடைகளில் வழங்கப்படும் இறைச்சியின் எடை சரியான அளவில் இருக்கி றதா? என்றும் விசாரித்தனர்.10-க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையின்போது சில இறைச்சி கடைகளில் தராசுகள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. காலாவதி யான எலக்ட்ரானிக் தராசு, எடை மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
    • முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சங்ககிரி:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில், சங்ககிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் முருகேசன், திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் மற்றும் பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் கூறுகையில், எடை அளவுகளை முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இதுவரை முத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்தி வரும் வணிகர்கள், தங்களது எடையளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று முத்தரையிட்டுக் கொள்ள வேண்டும். மேலும், கடைகளில் மறு முத்திரைச் சான்றிதழ் நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றார்.

    • நூல் மில், ஆலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தம் 600 தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கப்பட்டது.
    • தராசுக்கு மறு முத்திரை பதிக்கும் முகாம். தாராபுரம் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் கே.ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கும் பணி நடைபெற்றது.

    தொழிலாளர் நலத்துறை மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் மில் வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தராசுகளுக்கு ஆண்டுதோறும் மறு முத்திரை பதிக்க வேண்டும்.தற்போது கடந்த ஜூன் மாதம் 16ந் தேதி முதல் இந்த மாதம் ஜூலை 15ந் தேதி வரை தாராபுரம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் சார்பில் வெள்ளகோவிலில் முகாம் அமைத்து தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கும் பணி நடைபெற்றது.இதில் நூல் மில், ஆலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தம் 600 தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கப்பட்டது.

    இந்த தராசுக்கு மறு முத்திரை பதிக்கும் முகாம். தாராபுரம் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் கே.ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    ×