வெள்ளகோவிலில் 600 தராசுகளுக்கு மறு முத்திரை

நூல் மில், ஆலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தம் 600 தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கப்பட்டது.தராசுக்கு மறு முத்திரை பதிக்கும் முகாம். தாராபுரம் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் கே.ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கும் பணி நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறை மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் மில் வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தராசுகளுக்கு ஆண்டுதோறும் மறு முத்திரை பதிக்க வேண்டும்.தற்போது கடந்த ஜூன் மாதம் 16ந் தேதி முதல் இந்த மாதம் ஜூலை 15ந் தேதி வரை தாராபுரம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் சார்பில் வெள்ளகோவிலில் முகாம் அமைத்து தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கும் பணி நடைபெற்றது.இதில் நூல் மில், ஆலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தம் 600 தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கப்பட்டது.

இந்த தராசுக்கு மறு முத்திரை பதிக்கும் முகாம். தாராபுரம் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் கே.ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com