search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scales"

    • முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின் படியும் விருதுநகர், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலா ளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர்.

    விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட திருமங்கலம் பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோ கப்படுத்தி வந்த மின்னணு மற்றும் விட்டத்தராசுகன் உள்ளிட்ட 97 எடையளவை கள் பறிமுதல் செய்யப்பட் டன. மேலும் தெரு வோர வியாபாரிகள் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்கள், சந்தை கள் மற்றும் கடைகள் நிறு வனங்களில் உபயோகப் படுத்தப்படும் எடையளவு களை மறுபரிசீலனை செய்து முத்திரையிடுமாறும், அதற்குரிய மறுபரிசீலனைச் சான்றினை ஆய்வின்போது காண்பிக்கும் வகையில் வைத்திருக்குமாறும் அறி வுறுத்தினர்.

    மேலும் வணிகர்கள் தராசு உள்ளிட்ட எடைய ளவை களை அரசால் அங்கீ கரிக்கப்பட்ட விற்பனை யாளர்களிடம் வாங்கும் போது, எடையளவைகள் முத்திரை யிடப்பட்டு உள்ளதா? என்பதை சரி பார்க்குமாறும், அதற்கான மறுபரிசீலனை சான்றினை கேட்டுப் பெறு மாறும் அறிவுறுத்தினர்.

    எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்க ளுக்கு 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத் தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணை யர், துணை ஆய்வாளர், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்ப டுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது.
    • சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது.

    நாமக்கல்:

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்ப டுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.

    இந்த நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்ட ணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது.

    அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, ரூ.400-ல் இருந்து, 600 ஆக உயர்த்தி யுள்ளது. அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப, அதன் மறு முத்திரைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நெருக்க டியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்று, சிறு குறு வணிகர்களின் வாழ்வா தாரத்தை காத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • தராசுகளில் போலி முத்திரை வைத்த வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    • ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை கீழமாசி வீதியில் உள்ள தராசு நிறுவனத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலி முத்திரை உளிகள் கண்டறியப்பட்டன.

    தரப்படுத்தப்படாத எடை அளவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அரசு சார்பில் வக்கீல் காளீஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
    • முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சங்ககிரி:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில், சங்ககிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் முருகேசன், திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் மற்றும் பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் கூறுகையில், எடை அளவுகளை முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இதுவரை முத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்தி வரும் வணிகர்கள், தங்களது எடையளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று முத்தரையிட்டுக் கொள்ள வேண்டும். மேலும், கடைகளில் மறு முத்திரைச் சான்றிதழ் நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றார்.

    • நூல் மில், ஆலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தம் 600 தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கப்பட்டது.
    • தராசுக்கு மறு முத்திரை பதிக்கும் முகாம். தாராபுரம் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் கே.ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கும் பணி நடைபெற்றது.

    தொழிலாளர் நலத்துறை மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் மில் வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தராசுகளுக்கு ஆண்டுதோறும் மறு முத்திரை பதிக்க வேண்டும்.தற்போது கடந்த ஜூன் மாதம் 16ந் தேதி முதல் இந்த மாதம் ஜூலை 15ந் தேதி வரை தாராபுரம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் சார்பில் வெள்ளகோவிலில் முகாம் அமைத்து தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கும் பணி நடைபெற்றது.இதில் நூல் மில், ஆலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தம் 600 தராசுகளுக்கு மறு முத்திரை பதிக்கப்பட்டது.

    இந்த தராசுக்கு மறு முத்திரை பதிக்கும் முகாம். தாராபுரம் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் கே.ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    ×