வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில்

தராசுகளில் போலி முத்திரை வைத்த வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில்
Published on

மதுரை

மதுரை கீழமாசி வீதியில் உள்ள தராசு நிறுவனத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலி முத்திரை உளிகள் கண்டறியப்பட்டன.

தரப்படுத்தப்படாத எடை அளவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அரசு சார்பில் வக்கீல் காளீஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com