search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேப்லெட்"

    • ரெட்மி பேட் மாடலில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் ரெட்மி பேட் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் டேப்லெட் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டின் முதல் டேப்லெட் என்ற பெருமையுடன் ரெட்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டது.

    பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுகமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ரெட்மி பேட் இந்திய விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி பேட் (3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 13 ஆயிரத்து 999

    ரெட்மி பேட் (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 14 ஆயிரத்து 999

    ரெட்மி பேட் (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 16 ஆயிரத்து 999

    இதன் மூலம் ரெட்மி பேட் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என துவங்கியது. இதன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் மாடல்களின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     


    விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி பேட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது மாத தவணை முறைகளை பயன்படுத்தும் போதோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்டிற்கு மட்டும் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

    • ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது.
    • ஒப்போ ரெனோ 11 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய பேட் ஏர் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஒப்போ பேட் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டேப்லெட் வெளியீட்டை ஒட்டி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

    டீசர்களின் படி இந்த டேப்லெட் தடிமனான டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் மற்றும் இருவித நிறங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் டிசைனை பார்க்க ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 மாடலுடன் ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ பேட் ஏர் 2 விலை CNY1000 இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35 இன்ச் 2.4K 1720x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8MP பிரைமரி கேமரா, EIS, 8MP செல்ஃபி கேமரா, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

     

    இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.

    பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ரெட்மி பிரான்டின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • புதிய ரெட்மி பேட் SE மாடல் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரெட்மி பேட் SE விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த டேப்லெட்- விலை, அம்சங்கள் மற்றும் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தற்போது லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ரெட்மி டேப்லெட் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி பேட் SE மாடலில் ஸ்னாப்டடிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 11 இன்ச் 1200x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 8000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர், ஹால் சென்சார் வழங்கப்படுகிறது.

    ரென்டர்களின் படி ரெட்மி பேட் SE மாடல் கிரே, கிரீன் மற்றும் பர்பில் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் ரெட்மி பேட் போன்றே காட்சியளிக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய பேட் 6 மேக்ஸ் மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலின் வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த டேப்லெட் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் சியோமி மிக்ஸ் ஃபோல்டு 3 மாடலுடன் புதிய பேட் 6 மேக்ஸ் 14 மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக சியோமி பேட் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய மேக்ஸ் மாடல் அறிமுகமாகிறது. பேட் 6 மேக்ஸ் 14 மாடலை சியோமி நிறுவனம் லேப்டாப் மற்றும் சியோமி பேட் 6 மாடல் 11 இன்ச் வேரியன்ட் உடன் ஒப்பிட்டுள்ளது. புதிய பேட் 6 மேக்ஸ் டேப்லெட்-இல் 14 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

     

    இது முந்தைய 11 இன்ச் ஸ்கிரீன் கொண்ட பேட் 6 மாடலை விட 62 சதவீதம் வரை பெரியது ஆகும். டீசரில் புதிய டேப்லெட் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. எனினும், சியோமி பேட் 6 மேக்ஸ் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதில் புதிய சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தகவல்களுடன் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ToF சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய டேப்லெட் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி ரக்கட் டேப்லெட் மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலில் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    5ஜி கனெக்டிவிட்டி கொண்ட உலகின் முதல் ரக்கட் டேப்லெட்- ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி 32000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் 2 ஆயிரத்து 720 மணி நேரத்திற்கு ஸ்டான்ட்-பை வழங்கும்.

    பிரீமியம் ரக்கட்ட டேப்லெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி வரையிலான ரேம் (12 ஜிபி ரேம், 12ஜிபி வரை நீட்டிக்கும் வசதி), மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர், MIL-STD-810H சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69K சான்று பெற்றுள்ளது.

     

    இதில் வழங்கப்படும் 32000 எம்ஏஹெச் பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 20MP நைட் விஷன் சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலின் விலை 999.97 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 82 ஆயிரத்து 681 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • ஹானர் பேட் X9 மாடல் மொத்தத்தில் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் தவிர ஹானர் பிரான்டு லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹானர் பேட் X9 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய டேப்லெட் மாடல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஹானர் பேட் X8 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஹானர் பேட் X9 மாடல் ரியல்மி பேட் 2, ஒப்போ பேட் ஏர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் டிஸ்ப்ளே, சுற்றிலும் சிமெட்ரிக்கல் பெசல்கள், 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹை-ரெஸ் ஆடியோ, மெட்டல் யுனிபாடி, 5MP சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி, 7250 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஹானர் பேட் X9 மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக்யுஐ 7.1 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹானர் பேட் X9 மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஹானர் பேட் X9 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 500 தள்ளுபடி, ஹானர் ப்ளிப் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய பிளாக்ஷிப் டேப்லெட் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு அப்கிரேடு போனஸ், தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் பிளாக்ஷிப் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களும் இடம்பெற்று இருந்தது. தற்போது இவற்றின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    புதிய கேலக்ஸி டேப் S9 சீரிஸ் கிராபைட் மற்றும் பெய்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

     

    கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள்:

    கேலக்ஸி S9 128 ஜிபி வைபை மாடல் ரூ. 72 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 128 ஜிபி 5ஜி மாடல் ரூ. 85 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 256 ஜிபி வைபை மாடல் ரூ. 83 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 96 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 பிளஸ் 256 ஜிபி வைபை மாடல் ரூ. 90 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 பிளஸ் 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 256 ஜிபி வைபை மாடல் ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 512 ஜிபி வைபை மாடல் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 512 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 999

    சாம்சங் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் டேப்லெட் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு அப்கிரேடு போனஸ், தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இவற்றின் விலை ரூ. 20 ஆயிரம் வரை குறைகிறது. அனைத்து டேப்லெட் மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்படுகிறது.

    • சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் கேலக்ஸி எஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
    • கேலக்ஸி டேப் S9 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன் கேலக்ஸி டேப் S9, டேப் S9 பிளஸ் மற்றும் டேப் S9 அல்ட்ரா மாடல்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸ் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய டேப்லெட் மாடல்கள் பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

    இவற்றில் 14.6 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, HDR 10+, டைனமிக் ரிப்ரெஷ் ரேட், AKG சவுன்ட், டால்பி அட்மோஸ் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளுக்கு ஏற்ப பிரைடன்சை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களுடன் கேலக்ஸி எஸ் பென் சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட வசதி வழங்கப்பட்டுள்ளது.

     

    அம்சங்கள்:

    டேப் S9: 11 இன்ச் டைனமிக் AMOLED 2x 120Hz டிஸ்ப்ளே, HDR 10+

    டேப் S9 பிளஸ்: 12.4 இன்ச் டைனமிக் AMOLED 2X 120 Hz டிஸ்ப்ளே, HDR 10+

    டேப் S9 அல்ட்ரா: 14.6 இன்ச் டைனமிக் AMOLED 2X 120Hz டிஸ்ப்ளே, HDR 10+

    8 ஜிபி+128 ஜிபி, 256 ஜிபி மெமரி (டேப் S9)

    12 ஜிபி+256 ஜிபி, 512 ஜிபி மெமரி (டேப் S9 பிளஸ்)

    12 ஜிபி+ 256 ஜிபி, 512 ஜிபி மெமரி (டேப் S9 அல்ட்ரா)

    16 ஜிபி+ 1 டிபி மெமரி (டேப் S9 அல்ட்ரா)

    டேப் S9: 13MP பிரைமரி கேமரா, 12MP செல்பி கேமரா

    டேப் S9 பிளஸ்: 13MP+8MP கேமரா, 12MP செல்பி கேமரா

    டேப் S9 அல்ட்ரா: 13MP+8MP கேமரா, 12MP+12MP செல்பி கேமரா

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர்

    5ஜி, எல்டிஇ, வைபை, வைபை டைரக்ட், ப்ளுடூத் 5.3

    குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், AKG சவுன்ட், டால்பி அட்மோஸ்

    சாம்சங் நாக்ஸ் செக்யுரிட்டி

    கைரேகை சென்சார்

    IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1.1

    டேப் S9: 8400 எம்ஏஹெச் பேட்டரி

    டேப் S9 பிளஸ்: 10900 எம்ஏஹெச் பேட்டரி

    டேப் S9 அல்ட்ரா: 11200 எம்ஏஹெச் பேட்டரி

    • ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    • ஹானர் பேட் X9 மாடலில் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட மொத்தம் 7 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹானர் பிரான்டின் புதிய ஹானர் பேட் X9 மாடலுக்கான டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஹானர் டேப்லெட் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    டீசரில் புதிய ஹானர் பேட் X9 வாங்குவோருக்கு ஹானர் ப்ளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1 ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஹானர் பேட் X9 மாடலில் 5MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீக்கர் டிசைன் வழங்கப்படுகிறது.

    ஹானர் பேட் X9 மாடலில் 7250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்தற்கு வீடியோ பிளேபேக் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 199.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 450 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • லெனோவோ நிறுவனத்தின் டேப் M10 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப் M10 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன், டேப் பென் பிளஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 7700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லெனோவோ டேப் M10 5ஜி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கான வீடியோ ஸ்டிரீமிங் வழங்குகிறது.

     

    லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:

    10.61 இன்ச் LCD ஸ்கிரீன், 1200x2000 பிக்சல் ரெசல்யூஷன்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    4 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம்

    6 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம்

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    13MP செல்ஃபி கேமரா

    8MP பிரைமரி கேமரா

    7700 எம்ஏஹெச் பேட்டரி

    ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் ஸ்பீக்கர்கள்

    டால்பி அட்மோஸ்

    மைக்ரோபோன்

    டேப் பென் பிளஸ் சப்போர்ட்

    இந்திய சந்தையில் லெனோவோ டேப் M10 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    ×