search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி சிறை"

    • சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • டெல்லியில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி கவர்னர் சக்சேனா சமீபத்தில் சிறைக்கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறைகளுக்கான 2 வார ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து டெல்லியில் உள்ள 16 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டர் லோகேஷ் தாமா மற்றும் வார்டர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இயக்குனர் ஜெனரல் (சிறைகள்) சஞ்சய் பானிவால், ஐ.பி.எஸ்., அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

    சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.

    • கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவின் முதல் அலை தாக்க தொடங்கியபோது சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
    • 3 சிறைகளில் இருந்து, 5,525 கைதிகள் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசர பரோல் மூலம் விடுவிக்கப்பட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி ஆகிய 3 முக்கிய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவின் முதல் அலை தாக்க தொடங்கியபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

    அந்தவகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 3 சிறைகளில் இருந்தும், 5,525 கைதிகள் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசர பரோல் மூலம் விடுவிக்கப்பட்டனர். இதில் 19 சதவீதத்துக்கும் அதிகமான கைதிகள், அதாவது 1,063 கைதிகள் இன்னும் சிறைக்கு திரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட கேள்விக்கு மேற்கண்ட சிறை நிர்வாகம் அளித்த பதில் மூலம் இது தெரிய வந்துள்ளது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலையின்போது விடுவிக்கப்பட்ட கைதிகள் கோர்ட்டின் அடுத்த உத்தரவு வந்த பின்னரே சரணடைய முடியும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×