search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டர்ர்ர்ரனக்கா"

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாமி ஸ்கொயர். விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

    சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பை பெற்றுள்ளது. காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த படத்தில் இடம்பெறும் டர்ர்ர்ரனக்கா... என்ற பாடல் அனைத்து தரப்பினராலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.  



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம், பரத் அனே நேனு படங்கள் ஹிட்டடித்த நிலையில், ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்றுவெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram #DeviSriPrasad

    சாமி ஸ்கொயர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சாமி படத்தில் இடம்பெற்ற திருநெல்வேலி அல்வாடா பாடலைப் போல இந்த பாகத்தில் டர்ர்ர்ரனக்கா என்ற பாடல் உருவாகுவதாக கூறப்படுகிறது. #SaamySquare
    சாமி 2 படத்துக்காக திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் காரைக்குடியில் செட் போட்டு படம் பிடிக்கப்படுகிறது.

    சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அல்வாடா பாடல் பிரபலமான ஒன்று. இந்த பாடல் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் நடப்பதாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் எடுக்கப்படவில்லை. உண்மையில் காரைக்குடியில் செட் போட்டுதான் படம் பிடித்தார்கள். 

    இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். ’டர்ர்ர்ரனக்கா...டர்ர்ர்ரனக்கா...’ என்று தொடங்கும் பாடல் முந்தைய பாக பாடலை விட பெரிய ஹிட் அடிக்கும் என்கிறது படக்குழு. 



    சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் இயக்குநர் ஹரி. ஆனால் திரிஷா இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை. #SaamySquare #Vikram #keerthySuresh

    ×