என் மலர்
சினிமா

சாமி ஸ்கொயர் - எதிர்பார்ப்பை எகிறவைத்த தேவி ஸ்ரீ பிரசாத்
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாமி ஸ்கொயர். விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பை பெற்றுள்ளது. காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த படத்தில் இடம்பெறும் டர்ர்ர்ரனக்கா... என்ற பாடல் அனைத்து தரப்பினராலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம், பரத் அனே நேனு படங்கள் ஹிட்டடித்த நிலையில், ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்றுவெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram #DeviSriPrasad
Next Story






