search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிவி பிரகாஷ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்று மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "தனுஷ் மூன்றாவதாக படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அவரின் சொந்தகாரர் மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் நான் தான் இசையமைக்கவுள்ளேன். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்" என கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.



    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு 'தங்கலான்' படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், "உங்கள் கலைத்திறன் உண்மையிலேயே சினிமாவிற்கு கிடைத்த பரிசு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
    • அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். அதாவது, ஒரு வயது சிறுவனின் மூளைக்கு அருகே கட்டி ஒன்று இருந்ததாகவும் அதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


    இதற்காக சமூக வலைதளம் மூலம் சம்பந்தபட்ட நபர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் உதவி கேட்டார். இதை பார்த்த ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ரூ.75,000 பணம் அனுப்பி உள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன் ஸாட்டை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ் 'என்னால் முடிந்த சிறு உதவி 'என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், "இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

    நாந்தாண்டா நீதி ….

    நாந்தாண்டா நீதி …." என்று குறிப்பிட்டு முதல் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


    • ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரெபெல்’.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


    இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • ஜி.வி. பிரகாஷின் ரெபெல் படம் குறித்த புதிய அப்டேட் வெளியீடு.
    • ரெபெல் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

     

    இந்த நிலையில், ரெபெல் படத்தின் டீசர் வெளியீடு குறித்த புதிய தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி ரெபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெபெல் படத்தின் டீசர் நாளை (நவம்பர் 11) மாலை 5.00 மணிக்கு வெளியாக இருக்கிறது. 

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.



    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சுதா கொங்கரா- சூர்யா கூட்டணியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • அறிமுக இயக்குனர் நிக்கேஷ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், சூர்யா 43 போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


    ரெபெல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போராட்டக் களத்தின் நடுவில் ஜி.வி.பிரகாஷ் பயத்துடன் நிற்பது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள படக்குழு 'அதிகார மையங்களை அதிர வைப்பதே புரட்சி' என்று குறிப்பிட்டுள்ளது.


    • ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
    • இவர் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார்.



    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் 25-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷின் 25-வது படத்தை 'காதலிக்க யாருமில்லை' படத்தை இயக்கியுள்ள கமல் பிரசாத் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.



    மேலும், பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

    • ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
    • இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    ரெபெல் போஸ்டர்

    இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரெபெல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அடியே’.
    • இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், ஜி.வி.பிரகாஷ் குமார், கவுரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன் ஆகிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது, 'அடியே' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து திரைப்படத்தை தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, அதில் வெற்றி பெற்று, அதன் ஊடக லாபத்தை காண்பது என்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    என்னுடைய நடிப்பில் வெளிவந்த 'பேச்சுலர்', 'செல்ஃபி' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'அடியே' திரைப்படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிக்கிறோம். தயாரிப்பாளர் முதலீடு செய்கிறார். அதில் அவர் லாபம் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சி இருக்கும். அப்போதுதான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இந்த திரைப்படம் வசூலில் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.


    நடிப்பை பொறுத்தவரை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் வழிகாட்டுதல் தான் காரணம். படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமானவர்கள் எனது நடிப்பை பாராட்டினார்கள். இவை அனைத்தும் இயக்குனரைத்தான் சாரும். படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். இப்படத்தின் படத்தொகுப்பு வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதற்காகவும் அறிமுக படத்தொகுப்பாளர் முத்தையனை பாராட்டுகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

    • ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சைரன்’.
    • 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


    ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி, ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சைரன்' படத்தின் அப்டேட் நாளை ஜெயம் ரவி பிறந்த நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    ×