தமிழுக்காக போராடி செத்தவன் ஒருத்தன் இருக்கான்- கவனம் ஈர்க்கும் ரெபெல் டீசர்

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரெபெல்’.இப்படத்தை அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கியுள்ளார்.
தமிழுக்காக போராடி செத்தவன் ஒருத்தன் இருக்கான்- கவனம் ஈர்க்கும் ரெபெல் டீசர்
Published on

அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com