என் மலர்
சினிமா செய்திகள்
X
ஜி.வி. பிரகாஷூக்காக களமிறங்கும் சூர்யா
Byமாலை மலர்10 Nov 2023 7:58 PM IST
- ஜி.வி. பிரகாஷின் ரெபெல் படம் குறித்த புதிய அப்டேட் வெளியீடு.
- ரெபெல் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், ரெபெல் படத்தின் டீசர் வெளியீடு குறித்த புதிய தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி ரெபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெபெல் படத்தின் டீசர் நாளை (நவம்பர் 11) மாலை 5.00 மணிக்கு வெளியாக இருக்கிறது.
Next Story
×
X