போராட்டக் களத்தின் நடுவில் ஜி.வி.பிரகாஷ்

அறிமுக இயக்குனர் நிக்கேஷ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
போராட்டக் களத்தின் நடுவில் ஜி.வி.பிரகாஷ்
Published on

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், சூர்யா 43 போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

ரெபெல் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போராட்டக் களத்தின் நடுவில் ஜி.வி.பிரகாஷ் பயத்துடன் நிற்பது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள படக்குழு 'அதிகார மையங்களை அதிர வைப்பதே புரட்சி' என்று குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com