search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிதேந்திர சிங்"

    • பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
    • பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில தேர்தலில் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளின் பேரணியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஐம்மு:

    பாகிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இந்திய வம்சாவளி அகதிகள், பிரிவினைக்குப் பிறகு, இந்திய பக்கம் தஞ்சம் அடைய குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

    நாடு பிரிக்கப்படுவதற்கு முந்தைய மேற்கு பாகிஸ்தானில் பிறந்த டாக்டர் மன்மோகன் சிங், குஜ்ரால் ஆகிய இருவரும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை மறுக்கப்பட்டது. சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் சூழ்ச்சிகளால், பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 370வது சட்டப்பிரிவுவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி இந்த முரண்பாட்டை சரிசெய்தார். அதன்பிறகு, இப்போது ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் கூட தேர்தலில் போட்டியிடலாம். மேலும் எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட அவர்கள் ஆகலாம்.

    அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பொன்னான அத்தியாயத்தை பதிவு செய்யும். அதில் ஜம்மு காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் போன்ற நாட்டின் ஒதுக்குப்புறப் பகுதிகளின் திறன்கள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் விவசாய துறையில் பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.

    • கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி.

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது. 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ள எட்டு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி 75 கடற்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும் விதமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள கோவளம் கடற்கரையில் இன்று குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி டாக்டர் ஜிஜேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அமைச்சர், கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


    பிரதமர் மோடியின் அறைகூவலால் ஈர்க்கப்பட்டு இல்லம்தோறும் தேசியக் கொடி ஏற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்க கோவளம் கடற்கரைப் பகுதிக்கு வந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தேசியக் கொடியினை ஏற்றி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

    • மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் உலக தரத்திற்கு இணையான நிர்வாக சீர்திருத்தம்.
    • கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனுக்கும் பலன்கள் சென்றடைய வேண்டும்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு அரசு தீர்வு காணும் அதிகபட்ச கால வரம்பு 60 நாட்களில் இருந்து 45 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களின் குறைகளை தீர்க்கும் முறையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்கு இணங்க தற்போது அந்த காலக்கெடு 30 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்வுத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் உலக தரத்திற்கு இணையான நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், துறைகள் ரீதியான மீளாய்வுக் கூட்டங்களில், பிரதமரே பொதுமக்களின் குறைகளின் நிலையை ஆய்வு செய்வதாகவும் மந்திரி சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது.

    2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் மனநிறைவு மற்றும் நேரக் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய இரட்டைக் காரணிகளால் பொதுமக்கள் குறைகள் தொடர்பான வழக்குகள் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இது குடிமக்கள் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் மந்திரி கூறியுள்ளார்.

    மோடி அரசின் முக்கிய மந்திரம், கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனுக்கும் நலத்திட்டங்களின் அனைத்துப் பலன்களும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத் நிலநடுக்கம் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது.
    • தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று சவாலாக உள்ளது.

    ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், தெரிவித்துள்ளதாவது:

    முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர் பிரதமராக ஆகி உலகிலேயே 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே இந்தியத் தலைவர் நரேந்திர மோடி மட்டுமே. கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்காமல், நேரடியாக பிரதமர் பதவியை ஏற்ற முதலமைச்சர் என்ற அரிதான சாதனையும் மோடிக்குச் சொந்தமானதாகும்.

    கடந்த 2002ல் மோடி குஜராத் முதலமைச்சராக வருவதற்கு முன், அவர் அரசிலோ அல்லது நிர்வாகத்திலோ எந்தப் பதவியையும் வகித்ததில்லை. கடந்த காலங்களில் உள்ளூர் மட்டத்திலோ அல்லது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

    மோடியின் ஆட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் அத்தியாவசியமான காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற போது பூஜ் நகரில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம்தான் அவருக்கு முதல் சவாலாக இருந்தது.

    பிரதமர் ஆன பிறகு அவர் எதிர்கொண்டுள்ள சமீபத்திய மிகப் பெரிய சவால் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுநோய். புதிய சவால்களை எதிர்கொண்டு வலுவாக உள்ள ஆட்சி என்பதற்கு மோடி தலைமையிலான ஆட்சியே உதாரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
    • பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.

     ஜம்மு:

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

    ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×