search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை டாக்டர்"

    சென்னையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய சிவநாதன் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர்கள் மனோகரன்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்கள் இருவருமே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் சிவநாதன் (வயது 25). இவர் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் மானாமதுரைக்கு வந்து தனது பெற்றோர்களை சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவர் விஷம் குடித்துள்ளதாக அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மாடியில் இருந்து குதித்தபோது வாலிபரின் முதுகில் பாய்ந்த இரும்பு கம்பியை அகற்றி சென்னை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (29). டிரைவரான இவர் மாடியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் சினிமாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் தனது அறைக்கு திரும்பினார். அப்போது வீட்டின் ‘கேட்’ பூட்டப்பட்டிருந்தது.

    காம்பவுண்டு சுவரில் ஏறி முதல் மாடியில் உள்ள தனது அறையின் பால்கனிக்கு சென்றார். அங்குயின் கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே அங்கிருந்து வெளியே வர மாடியில் இருந்து குதித்தார்.

    அப்போது வாசலில் உள்ள இரும்பு கதவு மீது விழுந்தார். அவரது முதுகில் கதவின் இரும்பு கம்பி பாய்ந்தது. அவரால் அதில் இருந்து விடுபட முடியவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை நள்ளிரவு 1 மணியளவில் அந்த வழியாக வந்த ஒருவர் பார்த்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்டனர்.

    அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடனடியாக 3 அடி நீளமும், 3 செ.மீ. அகலமும் கொண்ட கம்பி முதுகில் 1 அடி ஆழத்துக்கு 7-வது விலா எலும்பு பகுதியில் பாய்ந்து இருந்தது.

    அந்த கம்பியின் முனை வளைந்த நிலையில் ‘கொக்கி’ போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது. அந்த கொக்கி முதுகு பகுதிக்குள் இருந்தது. நுரையீரலின் இடதுபுறத்தில் குத்தி ஊடுருவி இதயம் மற்றும் மூச்சுக்குழல் பகுதி வரை சென்று இருந்தது. இதையடுத்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மிகவும் ஆபத்தான ஆபரேசனை 3 டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். முதுகில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை வெளியே இழுத்து அகற்றினர். தற்போது வாலிபர் வெற்றிவேல் நலமாக இருக்கிறார். ஒரு வார சிகிச்சைக்கு பின் வீடு திரும்புகிறார். #tamilnews
    ×