search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை குடிநீர் வாரியம்"

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாய் இணைப்புப் பணிகள், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 31-ந்தேதி (நாளை) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தண்டையார்ப்பேட்டையில் உள்ள 42, 43, 48-வது வார்டுகள் (தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகள்), ராயபுரத்தில் உள்ள 49, 50, 51, 52, 53-வது வார்டுகள், திரு.வி.க.நகரில் உள்ள 73, 76, 77-வது வார்டுகள் (புளியந்தோப்பு, பட்டாளம்) ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள https://chennaimetrowater.tn.gov.in/ என்ற குடிநீர் வாரியத்தின் இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.11 கோடியில் புதிய திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • கொசஸ்தலை ஆற்றுபடுகையில் மொத்தம் 22 ஏக்கரில் புதிய குளங்களை உருவாக்க திட்டம் உள்ளது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 27.5 ஏக்கர் இடம் மாநகராட்சி வசமும், 11.5 ஏக்கர் இடம் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு பொழுதுபோக்கு பூங்கா, படகு சவாரி, கண்ணாடி தொங்கு மேம்பாலம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இதற்கிடையே வில்லிவாக்கம் ஏரிப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 3 ஏக்கர் நிலம் போக மீதி உள்ள 8.5 ஏக்கர் இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு உள்ள ஏரியுடன், 8.5 ஏக்கர் நிலத்தையும் சீரமைத்து ஏரியுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் நீர்பரப்பு அதிகரிக்கும்.

    இதற்காக ரூ.11 கோடியில் புதிய திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வில்லிவாக்கம் ஏரி 219 ஏக்கரில் இருந்தது. தற்போது இது 39 ஏக்கராக சுருங்கிவிட்டது. இதில் 27.5 ஏக்கர் சென்னை மாநகராட்சியிடமும், மீதி உள்ள இடம் சென்னை குடிநீர் வாரியத்திடமும் இருந்தது.

    தற்போது குடிநீர்வாரியத்திடம் உள்ள 3 ஏக்கர் இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மீதி உள்ள 8.5 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி சீரமைத்து ஏரியுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் பரப்பளவு விரி வடைந்து கூடுதல் தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    ஏரியில் பல வகையான மீன்களை விடவும் திட்டமிட்டு உள்ளோம். கொசஸ்தலை ஆற்றுபடுகையில் மொத்தம் 22 ஏக்கரில் புதிய குளங்களை உருவாக்க திட்டம் உள்ளது.

    வில்லிவாக்கம் ஏரியில் உருவாக்கப்பட்டு உள்ள கண்ணாடி தொங்கு பாலம் அதிகாரிகளின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்' என்றார்.

    • யு.பி.ஐ. கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தியுள்ளது. இந்த இணைய வழியிலான கட்டண நுழைவு வாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்.

    மேலும் யு.பி.ஐ. கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தெரிந்து கொள்ளவும், பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.

    ஏற்கனவே நுகர்வோர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது. மேலும் ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

    • நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம்.

    சென்னை:

    குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் சனிக்கிழமை மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26-ந்தேதி அன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நுகர்வோர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் மற்றும் வசூல் மையங்களில் உள்ள கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.

    மேலும் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம்.

    எனவே நுகர்வோர்கள் 31-ந்தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 7 பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் 700 மில்லி மீட்டர் விட்டமுள்ள உந்து குழாயுடன் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள (சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப்.) சந்திப்பில் 1500 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான குழாய் இணைக்கும் பணி 18-ந் தேதி நடக்கிறது.

    இதனால் அன்று காலை 6 மணி முதல் 19-ந் தேதி காலை 6 மணி வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 7 பகுதிகளில் குடி நீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https:\\chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதி களுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

    • சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டங்கள் வருகிற 11-ந் தேதி அனைத்து பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.
    • கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டங்கள் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர் கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என நுகர்வோர்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலம் தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    மேலும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தினசரி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.885 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் கிடைக்கிறது.

    ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என நுகர்வோர்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிக கட்டிடங்களுக்கு இந்த கட்டணம் மாறுபடும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க விரிவாக்க பகுதிகளில் வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது.

    கடந்த 2019-20-ம் ஆண்டு வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் 5 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    இந்த நிலையில் 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5 சதவீதமும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதமும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஆண்டுதோறும் இதே சதவீதத்தில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணமாக மாதம் ரூ.80 வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ரூ.84 வசூலிக்கப்படும். வீடுகளுக்கு லாரி குடிநீர் கட்டணத்தை பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் ரூ.475-க்கு வழங்கப்பட்டு வருகிறது. அது இனி ரூ.499 ஆக அதிகரிக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு லாரி குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ.700-க்கு வழங்கப்பட்டு வந்தது. இனி அது ரூ.770 ஆக அதிகரிக்கும்.

    • நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் (தேசிய காற்று சக்தி நிறுவனம் எதிரில் தற்போதுள்ள 800 மி.மீ விட்டமுள்ள கடல்நீர் சுத்திகரிப்பு பரிமாற்றக் குழாயினை மடிப்பாக்கம் குடிநீர் விநியோக அமைப்புடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    எனவே பகுதி 13-ல் உள்ள தரமணி, வேளச்சேரி மெயின் ரோடு, பகுதி 14-ல் உள்ள ஒக்கியம்-துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதி 15-ல் உள்ள சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி இடங்களில் நாளை (11-ந்தேதி), 12-ந்தேதி ஆகிய 2 நாட்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி பொறியாளர்களின் செல்போன் எண்கள் 8144930913, 8144930914, 8144930915 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கோயம்பேட்டில் அமைந்துள்ள சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடபழனி ஆற்காடு சாலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை முதல் தெற்கு சிவன் கோவில் தெரு வரை தற்போதுள்ள 525 மிமீ விட்டமுள்ள குடிநீர்க் குழாயுடன் 500 மிமீ விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கோயம்பேட்டில் அமைந்துள்ள சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பகுதி-8, 9 மற்றும் பகுதி-10 ஆகிய பகுதிகளில் 28.12.2022 மற்றும் 29.12.2022 ஆகிய நாட்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதிப் பொறியாளர்-8 (அண்ணா நகர்) கைபேசி எண்.8144930908, பகுதிப் பொறியாளர்-9 (தேனாம் பேட்டை) கைபேசி எண்.8144930909, பகுதிப்பொறியாளர்-10 (கோடம்பாக்கம்) கைபேசி எண்.8144930910.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை முதல் 28-ந்தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • அவசர குடிநீர் தேவைக்கு, அந்தந்த குடிநீர் வாரிய வார்டு பொறியாளர் மற்றும் பகுதி பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை முதல் 28-ந்தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

    அவசர குடிநீர் தேவைக்கு, அந்தந்த குடிநீர் வாரிய வார்டு பொறியாளர் மற்றும் பகுதி பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-4567 4567 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பருவமழையின் போது கழிவுநீர் மற்றும் குடிநீரேற்று நிலையங்கள் இரவு, பகலாக இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • பகலில் பகுதி மற்றும் வார்டு பொறியாளர்கள் கண்காணிக்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதேபோல் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் 72.7 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 10 முதல் 240 எச்.பி. திறன் கொண்ட 313 கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளது.

    பருவமழையின் போது கழிவுநீர் மற்றும் குடிநீரேற்று நிலையங்கள் இரவு, பகலாக இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பகலில் பகுதி மற்றும் வார்டு பொறியாளர்கள் கண்காணிக்கின்றனர். இதே போல் இரவு நேரத்தில் கண்காணிக்க 15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் நாளை (1-ந்தேதி) முதல் 30-ந்தேதி வரை இரவு நேரத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மண்டலம் வாரியாக இரவு நேர சிறப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் விபரம் வருமாறு:-

    சிங்காரவேலன் (திருவொற்றியூர்)- 81449 30970, ஏழுமலை (மணலி)- 81449 30570, ஜாய்ஸ் சுமதி (மாதவரம்) - 81449 31122, லட்சுமி தேவி (தண்டையார்பேட்டை) - 89398 56188, பாவைகுமார் (ராயபுரம்) - 81449 30444, ராமமூர்த்தி (திரு.வி.க.நகர்) - 81449 30958, அன்பரசி (அம்பத்தூர்) - 81449 30956, அகிலாண்டேஸ்வரி (அண்ணா நகர்) - 81449 30728, வெண்ணிலா (தேனாம்பேட்டை) - 81449 31144, புவனேஸ்வரன் (கோடம்பாக்கம்) - 81449 30540, புஸ்பலதா (வளசரவாக்கம்) - 81449 30625, உமா (ஆலந்தூர்) - 81449 30690, வெங்கட்ராமன் (அடையாறு) - 81449 30848, பிரேமா (பெருங்குடி) - 81449 30924, கலைச்செல்வன் (சோழிங்கநல்லூர்) - 81449 30589.

    • முதல் அரையாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாளாகும்.
    • குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணமாக முதல் அரையாண்டிற்கு ரூ.480 கோடி வசூலானது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வருவாய் இனங்களில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    ஏப்ரல்-செப்டம்பர் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலில் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    முதல் அரையாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாளாகும். சொத்து வரியாக ரூ.696 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    இது கடந்த ஆண்டு 2-வது அரையாண்டு வசூலை (ரூ.403 கோடி)விட 293 கோடி அதிகமாகும். தொழில் வரி ரூ.246 கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு அரையாண்டை காட்டிலும் (ரூ.237 கோடி) கூடுதலாக ரூ.9 கோடி வசூலிக்கப்பட்டதாக வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணமாக முதல் அரையாண்டிற்கு ரூ.480 கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு முதல் அரையாண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.372 கோடியைவிட 29 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.155 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த வருடம் இது ரூ.168.77 கோடியாக உயர்ந்துள்ளது.

    சொத்துவரி உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்ந்தது. இதனால் மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது.

    ×