என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளைமேடு பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
    X

    சூளைமேடு பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

    • கோயம்பேட்டில் அமைந்துள்ள சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடபழனி ஆற்காடு சாலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை முதல் தெற்கு சிவன் கோவில் தெரு வரை தற்போதுள்ள 525 மிமீ விட்டமுள்ள குடிநீர்க் குழாயுடன் 500 மிமீ விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கோயம்பேட்டில் அமைந்துள்ள சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பகுதி-8, 9 மற்றும் பகுதி-10 ஆகிய பகுதிகளில் 28.12.2022 மற்றும் 29.12.2022 ஆகிய நாட்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதிப் பொறியாளர்-8 (அண்ணா நகர்) கைபேசி எண்.8144930908, பகுதிப் பொறியாளர்-9 (தேனாம் பேட்டை) கைபேசி எண்.8144930909, பகுதிப்பொறியாளர்-10 (கோடம்பாக்கம்) கைபேசி எண்.8144930910.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×