என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் உள்பட 7 பகுதிகளில் 18-ந் தேதி குடிநீர் நிறுத்தம்
- பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 7 பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் 700 மில்லி மீட்டர் விட்டமுள்ள உந்து குழாயுடன் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள (சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப்.) சந்திப்பில் 1500 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான குழாய் இணைக்கும் பணி 18-ந் தேதி நடக்கிறது.
இதனால் அன்று காலை 6 மணி முதல் 19-ந் தேதி காலை 6 மணி வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 7 பகுதிகளில் குடி நீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.
அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https:--chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதி களுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.






