search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai metro water board"

    • நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம்.

    சென்னை:

    குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் சனிக்கிழமை மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26-ந்தேதி அன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நுகர்வோர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் மற்றும் வசூல் மையங்களில் உள்ள கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.

    மேலும் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம்.

    எனவே நுகர்வோர்கள் 31-ந்தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என நுகர்வோர்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலம் தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    மேலும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தினசரி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.885 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் கிடைக்கிறது.

    ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என நுகர்வோர்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிக கட்டிடங்களுக்கு இந்த கட்டணம் மாறுபடும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க விரிவாக்க பகுதிகளில் வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது.

    கடந்த 2019-20-ம் ஆண்டு வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் 5 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    இந்த நிலையில் 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5 சதவீதமும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதமும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஆண்டுதோறும் இதே சதவீதத்தில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணமாக மாதம் ரூ.80 வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ரூ.84 வசூலிக்கப்படும். வீடுகளுக்கு லாரி குடிநீர் கட்டணத்தை பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் ரூ.475-க்கு வழங்கப்பட்டு வருகிறது. அது இனி ரூ.499 ஆக அதிகரிக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு லாரி குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ.700-க்கு வழங்கப்பட்டு வந்தது. இனி அது ரூ.770 ஆக அதிகரிக்கும்.

    கொருக்குப்பேட்டையில் குடிநீர் வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சக ஊழிர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கன். இவர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று இரவு தியாகப்ப தெருவில் குடிநீர் வழங்க ரோட்டில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் தகராறு செய்து அவரை தாக்கி விட்டு ஓடி விட்டார்.

    இதை அறிந்த சக ஊழியர்கள் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் இன்று ஒன்று திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.
    ×