search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செடல் திருவிழா"

    • 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது .
    • ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையான புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் செடல் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மாலை இரு வேளையும் அம்மன் வீதி உலா நடந்தது. இரவில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது . இைதயொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற செடல் அணிந்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர். குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ெசடல் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செடல் அணிந்து கொள்வதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் செடல் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் மாவிளக்கு எடுத்து அம்மைன வழிபாடு செய்தனர். ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரை உற்சவம் நடைபெறும். குறிஞ்சிப்பாடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார் அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது .
    • அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நடுக்கு ப்பம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடி செடல் உற்சவம திருவிழாவை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி மாலை 6மணிக்கு குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது . நேற்று ( வியாழக்கிழமை) அம்மனு க்கு சாகை வார்த்தல் மற்றும் அன்ன தா னம், இரவு தெருக்கூத்து நடைபெற்றது.

    இன்று (வெள்ளிகிழமை ) காலை 9 மணி அளவில் நடுக்குப்பம் குளக்கரையில் இருந்து பால் குடம் எடுத்துச் சென்று அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை ( சனிக்கிழமை) இரவு 8 மணி யளவில் முத்தாலம்மனுக்கு தலை குளம் பம்பை சிவகுமார் தலைமையில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.
    • இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது. இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×