குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது . ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செடல் அணிந்து அம்மனை வழிபட காத்திருக்கும் பக்தர்கள்
செடல் அணிந்து அம்மனை வழிபட காத்திருக்கும் பக்தர்கள்
Published on

கடலூர்:

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையான புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் செடல் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மாலை இரு வேளையும் அம்மன் வீதி உலா நடந்தது. இரவில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது . இைதயொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற செடல் அணிந்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர். குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ெசடல் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செடல் அணிந்து கொள்வதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் செடல் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் மாவிளக்கு எடுத்து அம்மைன வழிபாடு செய்தனர். ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரை உற்சவம் நடைபெறும். குறிஞ்சிப்பாடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார் அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com