search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர்
    • முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணி வணக்கத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணி வணக்கத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முப்படைகளில் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார். தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மீது மலர் தூவப்பட்டது.

    • நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன்
    • அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி.

    இதற்கு முன்னதாக பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை புறப்பட்டுள்ளார். அவரை வரவேற்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் ''சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
    • ராஜ்நாத் சிங் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றியும், தேசியக் கொடியுடன் பேரணி நடத்தியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் பொதுமக்கள் தேசியக் கொடி ஏந்தியபடி சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். பொதுவாக காஷ்மீரில் பாதுகாப்பு காரணமாக முழு அடைப்பு போன்ற நிகழ்வு இருக்கும். தற்போது அதுபோன்ற இல்லை எனக் கூறப்படுகிறது.

    நேற்று பயங்கரவாதியின் சகோதரர் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்திருந்தார். அவர், சுதந்திர தினவிழாயொட்டி காஷ்மீரில் இரண்டு மூன்று நாட்கள் கடைகள் அடைக்கப்பட வலியுறுத்தப்படும். தற்போது அந்த நிலை இல்லை. காஷ்மீர் முன்னேற்றத்தை கண்டுள்ளது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வு மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது.
    • கவர்னரின் செயலை தமிழ்நாடு கல்வித்துறையின் மீது நடத்தும் சதியாகவே பார்க்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறேன். 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பேசுகிறார்.

    ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலையை உணர மறுக்கிறார் கவர்னர் ரவி. பல சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல், பல்கலைக்கழகங்களைச் சிதைத்தும், உயர்கல்வித்துறையைக் குழப்பியும் வருகிறார் கவர்னர் ரவி.

    நீட் தேர்வு மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது. கவர்னரின் செயலை தமிழ்நாடு கல்வித்துறையின் மீது நடத்தும் சதியாகவே பார்க்கிறோம்.

    சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் கவர்னரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக சுதந்திர தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது
    • தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் அனைத்தும் சுதந்திர தினம் (நாளை) மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது.

    தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன.
    • சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

    ஆலந்தூர்:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை (15-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்தில் இந்த மாதல் முதலே பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு நடைமுறை 16-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன.

    சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்துவந்து கண்காணிக்கின்றனா். அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அதைப்போல் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களிலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. அதைப்போல் விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

    • டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
    • கல்வி சார்ந்த பிரதிநிதிகளாக தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த பாரத் ரத்னா, விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த சுந்தரி ஆகியோர் பங்கேற்க செல்கின்றனர்.

    சென்னை:

    டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

    இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருப்பதால் மலர் அலங்காரத்தின் முக்கிய அம்சமாக ஜி20 இலச்சினை இடம் பெறுகிறது.

    செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சார்ந்த 1800 பேர் தங்களது வாழ்க்கை துணையுடன் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளார்.

    இதில் தமிழ்நாட்டில் இருந்து 44 பேர் குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.

    விவசாயத்துறை சுதாகர் (கோவூர் ஊராட்சி மன்ற தலைவர்), எஸ்.சங்கீதா திண்டுக்கல் அருகே ஆத்தூரை சேர்ந்த ஜம்ரூத் பேகம் மற்றும் ஈஷாக் கதர் துறை: காங்கேயம் காட்டுப்பாளையம் பழனிச்சாமி.

    திருப்பூர் செல்வி நீலாங்கரை மீனவ பிரதிநிதிகள் முனுசாமி-பத்மா உள்பட கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், பகுதியை சேர்ந்த 22 மீனவ பிரதிநிதிகள் சார்பில் பங்கேற்கிறார்கள்.

    கல்வி சார்ந்த பிரதிநிதிகளாக தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த பாரத் ரத்னா, விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த சுந்தரி ஆகியோர் பங்கேற்க செல்கின்றனர்.

    பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் வழுதிகைமேடு பகுதியை சேர்ந்த கோபி மற்றும் படப்பை கரசங்கால் சசிகலா செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயநிதி, துரைவேலு உள்பட மொத்தம் 44 பேர் பங்கேற்கிறார்கள்.

    • சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கோவை:

    நாடு முழுவதும் நாளை (15-ந் தேதி) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.

    கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு, தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பை ஏற்று கொள்கிறார். இதனை அடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.

    இதில் காந்திமாநகர் அரசு பள்ளி அரசூர் அரசு பள்ளி உள்பட 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 350 மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வ.உ.சி. மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணி, மைதானத்தை சீரமைக்கும் பணியும் நடக்கிறது. மோப்ப நாய் உதவியுடன், போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 1500 போலீசார், புறநகரில் 1500 போலீசார் என மொத்தம் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலைய பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    நேற்று ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகையும் நடைபெற்றது. ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலைய பகுதிகளில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரெயில் நிலைய மேடை, பயணிகளின் உடமைகள், பார்சல்கள் போன்றவற்றையும் சோதனை செய்தனர்.

    கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில் நிலைய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகிறார்களா என்பதையும் கண்காணித்தனர்.

    சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்ட முழுவதும் போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து, அதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர். இன்று காலையும் வாகன சோதனையானது நடந்து வருகிறது.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    • நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
    • கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
    • தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி. பவானீஷ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் வீர செயல்களுக்கான விருது, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான விருது, குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது ஆகியவை வழங்கப்படுவது உண்டு.

    அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 954 காவலர்களுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி. பவானீஷ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை பெருநகர துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு, திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் முத்து மலை, கோவை நகர காவல் கண்காணிப்பாளர் புகழ் மாறன் உள்ளிட்ட 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள ரெயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.
    • நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை.

    நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் அதை பெறுவதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். உயிர் கொடுத்து ரத்தம் சிந்தி நாட்டின் விடுதலை மட்டுமே லட்சியமாக கொண்டு போராடிய அவர்கள் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணம். ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.

    நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. நமது சுதந்திரத்தை படிப்படியாக பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×