search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடைகள்"

    • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர்.
    • தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து பீர் வகைகள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம், லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்மை ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலர்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு கெஸ்ட்ரா, ஸ்ட்ராங் பீர், ஹண்டர் வூட்பெக்கர், பவர் கூல் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டிகளுக்கு மேல் பீர் விற்பனையாகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பீர் விற்பனை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 65 லட்சம் பெட்டி அளவுக்கு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவும் கூலிங் பீர் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகிறார்கள். அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்கிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மது ஆலைகளில் இருந்து அதிகளவு பீர் கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு வாரத்துக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், இதற்கு முன்பு மது குடிப்பவர்கள் குறிப்பிட்ட ரக மதுபானங்களை வாங்கி குடிப்பது வழக்கம். மற்ற ரக பீர்களை குடித்தால் தலை வலிக்கும் என்று வாங்க மாட்டார்கள்.

    ஆனால் இப்போது அப்படி அல்ல. எந்த ரகமாக இருந்தாலும் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்கு போதை ஏற வேண்டும். அதுதான் நோக்கம். இதனால் ஒரு பிராண்ட் இல்லாவிட்டால் வேறொரு பிராண்டை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிகாரர்களின் மனநிலை மாறிவிட்டது. 5 வருடத்துக்கு முன்பு குடித்தவர்கள் மனநிலை வேறு விதமாக இருந்தது. இப்போது மனநிலை வேறு விதமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையாகி கிடைத்த சரக்கை வாங்கி குடிக்கிறார்கள்.

    இதனால் மது தட்டுப்பாடு என்ற நிலை வரவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து ஒரு வாரம் இருப்பு வைக்கும் அளவுக்கு சரக்கை அனுப்புகிறார்கள். இதனால் பீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது.
    • கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும்.

    சென்னை:

    'டாஸ்மாக்' மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பீர் கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பீர் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது. கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும். அதுவும் 'கூலிங் பீர்' வேண்டும் என்று கேட்டு வாங்குவது வாடிக்கையாளர்களின் வழக்கம்.

    தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் இப்போது வெளிமாநிலத்தில் தயாரிக்கப்படும் பீர் வகைககளை வாங்கவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சார்ந்த எஸ்.ஓ.எம். குரூப் கம்பெனி கும்மிடிப்பூண்டியில் மது தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த கம்பெனியின் பீர் வகைகளை கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதிக்கு பிறகு ஹன்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    இதே போல் பிற மாநிலங்களில் இருந்தும் விதவிதமான ரகங்களில் பீர் வகைகள் வாங்கி டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் எஸ்.என்.ஜே. குழுமத்தில் இருந்து 100 சதவீதம் பார்லி சார்ந்த பீரை அறிமுகப்படுத்தியது. இப்போது 4 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளை வாங்கி விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

    வெளிமாநில பீர் வகைகளை விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த கம்பெனியினர் 'கூலிங் பிரிட்ஜ்' வழங்கவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

    • வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
    • காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புதுச்சேரியில் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில், செப்டம்பர் 22-ந்தேதி ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது
    • தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் அனைத்தும் சுதந்திர தினம் (நாளை) மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது.

    தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மூடப்படும்.
    • தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிககை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான க்கூடங்கள் ஆகியவை 15.8.2023 அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது.

    தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
    • நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.‌

    தஞ்சாவூர்:

    தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தஞ்சை மாவட்டம்

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 166 டாஸ்மாக் கடைகளில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.

    தஞ்சையில் சி.ஆர்.சி. டெப்போ எதிரே, தஞ்சை நாகை ரோடு, கீழவாசல், கீழஅலங்கம், மானோஜியப்பாவீதி, வடக்கு மெயின்ரோடு, கிழக்கு போலீஸ் நிலையம் ரோடு, கீழவாசல் அண்ணாசாலை, தெற்கு அலங்கம், சாந்தப்பிள்ளைகேட், பட்டுக்கோட்டையில் மார்க்கெட் ரோடு, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சிநகர் ஆகிய 15 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

    திருவாரூர் -நாகை

    இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 10 டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பல்வேறு கட்சியினர், பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

    • 500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
    • முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம். எல். ஏ. கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவை யில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மது கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    தற்போது மூடப்பட்டுள்ள 500 மது கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
    • தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார்.

    விழுப்புரம்: 

    வடலூர் ராம லிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் நாளை 5-ந்தேதி (ஞாயிற்று க்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு 5-ந்தேதியை டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நாளை வடலூர் இராமலிங்கர் நினைவு நாளன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

    சேலம்:

    மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 3 கடைகளும் பார் இல்லாமலேயே கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே பார் அமைக்கப்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தின் வழியாக சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை ஒட்டியே 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடையிலும் தினமும் சராசரியாக 5 லட்ச ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இந்த 3 கடைகளும் பார் இல்லாமலேயே கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே பார் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார் அமைத்தவர்கள் அங்கு மது வந்து வாங்கி செல்பவர்களை படம் பிடிக்கும் வகையில் சி.சி.டி.வி கேமரா பொருத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு பார் நடத்த உரிய அனுமதி வழங்கப்படவில்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ஒருசிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இரண்டு கடைகளுக்கும் சேர்த்து பார் நடத்தி வருவதாகவும், கடை அருகிலேயே இறைச்சி வறுவல், தின் பண்டங்கள் விற்பனை, மது குடிக்கும் கூடம், வெட்டவெளியில் அமர்ந்து மது குடிக்க மேசை நாற்காலிகள் அனைத்தும் போடப்பட்டுள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் அதிரடியாக காமலாபுரம் மதுக்கடை பாரில் ஆய்வுகள் செய்தனர். தொடர்ந்து அங்கு கடை அமைத்து வறுவல்கள், தின் பண்டங்களை விற்பனை செய்த, சேலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், அங்கே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த நபர்களை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதனால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சுப்பிரமணி மீது அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார் நடத்தப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல காமலாபுரம் மதுக்கடையில் உரிய அனுமதி இல்லாமல் பார் நடத்துவதை சேலம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றும் இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×