search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடல்
    X

    டெல்டா மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடல்

    • தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
    • நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.‌

    தஞ்சாவூர்:

    தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தஞ்சை மாவட்டம்

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 166 டாஸ்மாக் கடைகளில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.

    தஞ்சையில் சி.ஆர்.சி. டெப்போ எதிரே, தஞ்சை நாகை ரோடு, கீழவாசல், கீழஅலங்கம், மானோஜியப்பாவீதி, வடக்கு மெயின்ரோடு, கிழக்கு போலீஸ் நிலையம் ரோடு, கீழவாசல் அண்ணாசாலை, தெற்கு அலங்கம், சாந்தப்பிள்ளைகேட், பட்டுக்கோட்டையில் மார்க்கெட் ரோடு, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சிநகர் ஆகிய 15 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

    திருவாரூர் -நாகை

    இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 10 டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பல்வேறு கட்சியினர், பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

    Next Story
    ×