search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுப்பிரியர்களின் மனக்குறையை தீர்க்க புதிய ரக பீர்கள் வருகிறது
    X

    மதுப்பிரியர்களின் மனக்குறையை தீர்க்க புதிய ரக "பீர்"கள் வருகிறது

    • தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது.
    • கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும்.

    சென்னை:

    'டாஸ்மாக்' மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பீர் கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பீர் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது. கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும். அதுவும் 'கூலிங் பீர்' வேண்டும் என்று கேட்டு வாங்குவது வாடிக்கையாளர்களின் வழக்கம்.

    தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் இப்போது வெளிமாநிலத்தில் தயாரிக்கப்படும் பீர் வகைககளை வாங்கவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சார்ந்த எஸ்.ஓ.எம். குரூப் கம்பெனி கும்மிடிப்பூண்டியில் மது தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த கம்பெனியின் பீர் வகைகளை கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதிக்கு பிறகு ஹன்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    இதே போல் பிற மாநிலங்களில் இருந்தும் விதவிதமான ரகங்களில் பீர் வகைகள் வாங்கி டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் எஸ்.என்.ஜே. குழுமத்தில் இருந்து 100 சதவீதம் பார்லி சார்ந்த பீரை அறிமுகப்படுத்தியது. இப்போது 4 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளை வாங்கி விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

    வெளிமாநில பீர் வகைகளை விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த கம்பெனியினர் 'கூலிங் பிரிட்ஜ்' வழங்கவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

    Next Story
    ×