search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தின அமுத பெருவிழா"

    • விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மக்கள் நன்றியுடையவர்களாக உள்ளனர் என பிரதமர் மோடி பேச்சு
    • மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை பின்பற்றினால் இந்தியா வேகமாக வளரும்.

    புதுடெல்லி:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் விடுதலைப் போராட்டத்தை நினைவுகூர்ந்து பேசியதாவது:-

    இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒரு புதிய திசையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய தினம் இன்று. இந்த தினத்தில், கடமையை செய்யும் பணியில் தங்களது உயிரை ஈந்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கார், வீர சாவர்க்கர் உள்ளிட்டவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் நன்றியுடையவர்களாக உள்ளனர்.

    ராணி லட்சுமிபாய் ஆகட்டும், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஜ்ரத் மகால் போன்ற இந்திய பெண்களின் வலிமையை நினைவுகூரும்போது, இந்தியா பெருமையால் நிரம்பி வழிகிறது.

    பிரிட்டிஷ் அரசாட்சியின் அடித்தளத்தினை அசைத்த மங்கள் பாண்டே, தத்யா தோப், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வாகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் நம்முடைய எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.

    முன்னேறிய எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் குடிமக்களிடம் ஒழுக்கம் ஆழமாக பதிந்துள்ளது. அதேபோன்று மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை பின்பற்றினால் இந்தியா வேகமாக வளரும். குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கான மரியாதை என்பது முக்கிய தூண் ஆகும். ஆகவே நமது பெண்களின் சக்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது. கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மூலம் புரட்சி ஏற்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
    • 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

    2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

    • மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின அமுத விழா கொண்டாடப்பட்டது.
    • வீடுகளுக்கு தேசியக்கொடி கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின அமுத விழா கொண்டாடப்பட்டது.

    சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றுவதற்காக மாரண்டஅள்ளி பேரூராட்சி சார்பில் முக்கிய வீதிகளில் சென்று கடைகள் மற்றும் வீடுகளுக்கு தேசியக்கொடி கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் கார்த்திகா, பன்னீர்செல்வம் மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கும், கடைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கொடியை வழங்கினர்.

    • தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

    சென்னை:

    இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி (சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா), பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

    பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்" (தமிழ்), "My favourite Freedom Fighter" (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "2047-ல் இந்தியா" (தமிழ்) "India by 2047" (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வரப்பெற்ற கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், உயர்தரமாகவும் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லுநர் குழு பரிந்துரையின்படி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ. 50, 000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும்.

    15 ஆகஸ்ட் 2022 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

    ×