search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன மொழி"

    • ஏவுதளம் அமைப்பது தொடர்பாக சீன ராக்கெட் உடன் தி.மு.க. அமைச்சர் விளம்பரம் வெளியிட்டனர்.
    • இதை கிண்டலடிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.

    இதுதொடர்பாக தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக.வின் தேசப்பற்று இதுதான் என விமர்சனம் செய்தார்.

    இதற்கிடையே, முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீனாவின் ஆட்சி மொழியான மாண்டரின் மொழியில் வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ.க. கிண்டலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், தங்களின் விருப்பமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    ×