search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையை சீரமைப்பு"

    • பண்ருட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் சென்னை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி விரிவாக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக பஞ்சரான சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பண்ருட்டி எல் என் புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் மோட்டார் சைக்கிலிள் செல்வோர் நடந்து செல்வோர் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    இது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் எல் என் புரம் பகுதியில் புழுதி புயலுடன் காற்று வீசும். இதனால் நடந்து செல்வோர் மோட்டார் சைக்கிலிள் செல்வோர்களின் கண்களை பட்டு நோய் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் குறிப்பாக இந்த சேதமான சாலையால் மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன விபத்து ஏற்பட்டு பலர் இந்த சாலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திடீரென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

    சேதமான சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் கலெக்டர் கூறிய அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். காலை 9:00 மணி முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இதனால் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி போக்குவரத்தை சரி செய்தனர். ஆனால் போலீசார் தொடர்ந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்

    ×