search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் ராஜகோபால்"

    • நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

    'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'  .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.




    கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-

    "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.




     


    எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.

    கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.

    • கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
    • இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகில் 80,90 களின் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. தற்போது படங்களில் நடிப்பதை குறைத்திருந்தாலும் இன்று வரை இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவர் கடைசியாக "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.



    இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கவுள்ள முழுநீள நகைச்சுவை படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, ரவிமரியா, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.




    இப்படம் குறித்து பேசிய இயக்குனர் சாய் ராஜகோபால், சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும் என்றார்.

    ×