search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பிராஸ் அகமது"

    சோயிப் மாலிக், சர்பிராஸ் அகமது சிறப்பான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் பகர் சமான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஆனால் 31 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    மறுமுனையில் விளையாடிய பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 58 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார்.



    6-வது வீரராக களம் இறங்கிய ஆசிப் அலி 21 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் ரன்வேகத்தில் தடை ஏற்பட்டது. 50 ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கள வீயூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்துவிட்டதாக தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார். #SarfrazAhmed #KedarJadhav
    துபாய் :

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    இதனால் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ரன்களை குவித்து எளிதில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில், ‘ நாங்கள், குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவரது சுழற்பந்து வீச்சை எதிர்க்கொள்வதற்கு ஏற்ப கள வியூகம் அமைத்தோம். ஆனால், எதிர்பாராமல் மூன்றாவதாக வந்த கேதார் ஜாதவ் எங்களின் வியூகங்களை தகர்த்தெறிந்து விக்கெட்டுக்களை சாய்து விட்டார். கேதர் ஜாதவின் பந்துவீச்சை கணித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது.

    முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த பின்னர் பாபர் அசாம், சோயிப் மாலிக் இணையின் நிதான ஆட்டத்தினால் சரிவில் இருந்து அணி மீண்டது. ஆனால், அதன் பிறகு மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் நாங்கள் எதிர்பார்த்த ரன்களை அடிக்க முடியவில்லை.



    எங்கள் அணி வீரர்கள் அனைவரும் மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தோம். எனினும் குரூப் போட்டிகள் என்பதால் இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் இந்த தவறுகளை சரி செய்வோம் என அவர் கூறினார். #SarfrazAhmed #KedarJadhav
    இந்தியாவிற்கு சாதகமான வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க கால ஆட்டவணையில் இந்தியா சில போட்டிகளில் அபு தாபியில் விளையாடும் வகையில் இருந்தது.

    அதன்பின் இந்தியாவின் அனைத்து போட்டிகளிலும் துபாயில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டடு. இது இந்தியாவிற்கு சாதகமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



    இதுகுறித்து சர்பிராஸ் கூறுகையில் ‘‘போட்டி அட்டவணையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியா ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தோற்றாலும் கூட, தொடர்ந்து துபாயில் விளையாட முடியும். அபுதாபிக்கும் துபாயிக்கும் டிராவல் செய்யும் பிரச்சனை உள்ளது. 90 நிமிடங்கள் பயணம் செய்து, பின்னர் விளையாட வேண்டும். அதன்பின் ஒருநாள் இடைவெளியில் அடுத்த போட்டியில் களம் இறங்க வேண்டும்.

    இது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏன் இதுபோன்று நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கையில் எடுக்க வேண்டும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹாங் காங் முதலில் பேட்டிங் செய்கிறது. #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (15.09.2018) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசம் இலங்கையை வீழ்த்தியது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஹாங் காங் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் தோற்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஆனால், அது நமது கையில் இல்லை. பெரிய தொடரில் விளையாடும் ஹாங் காங் அணிக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. 19-ந்தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கிறது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘எங்களுடைய முன்னேற்பாடுகள் (preparation) மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியா உடன் மோதுவதற்கு கிடைக்கும் ஓய்வு நாட்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்வோம்.

    இந்தியாவிற்கு எதிராக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முதல் பெரிய ஆட்டம். அதனால் உத்வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம். இந்தியாவிற்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்துவோம்.



    பெரிய தொடரின்போது உத்வேகம் முக்கியமானது. உத்வேகம்தான் முக்கியமான ரோலாக இருக்கும். அணி அதிகமான நம்பிக்கையில் உள்ளது. மனஉறுதியும் சிறப்பாக உள்ளது. ஆக, முதல் போட்டியில் இருந்தே உத்வேகத்தை அதிகரித்து, அதை கடைசி வரை கொண்டு செல்வோம்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளத்தை பார்த்தீர்கள் என்றால், பொதுவாகவே ஸ்லோ பிட்ச் ஆகத்தான் இருக்கும். ஆகவே, ஸ்பின்னர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், 300 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால், எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியை சாய்த்து விடுவார்கள்’’ என்றார்.
    ×