search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பிராஸ் அகமது"

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடமில்லை. விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இன்று இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.



    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது விமர்சனத்திற்கு உள்ளாகி விளையாடாமல் இருந்து சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சர்பிராஸ் அகமது, 2. பகர் சமான், 3. இமாம்-உல்-ஹக் 4. பாபர் ஆசம், 5. சதாப் கான், 6. சோயிப் மாலிக், 7. பஹீம் அஷ்ரப், 8. ஷஹீன் அப்ரிடி, 9. ஹசன் அலி, 10. அபித் அலி, 11. முகமது ஹபீஸ், 12. இமாத் வாசிம், 13. ஜுனைத் கான், 14. முகமது ஹசைனைன், 15. ஹரிஸ் சோஹைல்.
    2019 உலகக்கோப்பைக்கான எங்கள் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமதுதான் இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. அப்போது தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் சர்பிராஸ் அகமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி சர்பிராஸ் அகமதுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. இதனால் உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், நான்தான் கேப்டனாக இருப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த சர்பிராஸ் அகமது, இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் சர்பிராஸ் அகமதுதான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான தயார் திட்டத்தில் சர்பிராஸ் அகமதும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். சிறந்த தலைவர், சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையில்தான் பாகிஸ்தான் வென்றது. ஐசிசி டி20 தரவரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் மறுமதிப்பீடு செய்யும் வரை அவர்தான் கேப்டனாக இருப்பார்’’ என்றார்.
    சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

    தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

    இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

    இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறிக்கு எதிரான வகையில் ஸ்லெட்ஜிங் செய்த சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டர்பனில் 2-வது போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் சொற்ப ரன்களில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்கா சேசிங் செய்யும்போது, நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெலுக்வாயோ சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து பெலுக்வாயோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

    உருது மொழியில் பேசிய சர்பிராஸ் அகமதின் வாய்ஸ், ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் தெரிந்த பின்னர் கடும் விமர்சனம் எழும்பியது. சர்பிராஸ் அகமது 3-வது போட்டி தொடங்குவதற்கு முன் பெலுக்வாயோவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டார்.

    இருந்தாலும் ஐசிசி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் சர்பிராஸ் அகமது விளையாடமாட்டார்.
    பெலுக்வாயோ குறித்து சர்பிராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தென் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.



    இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் கூறும்போது, ‘‘சர்பிராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம்’’ என்றார்.
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    டர்பன்:

    பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 204 ரன் இலக்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 80 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

    பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தின் போது பெலக் வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    இதற்கிடையே சர்பிராஸ் அகமது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதில் எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறியுடனான பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

    2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. இதனால் சர்பிராஸ் அகமதுவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.

    இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுக்களும், ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 10 கேட்ச்கள் பிடித்து கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் மார்கிராம், டீன் எல்கர், ஹம்சா, பவுமா, ரபாடா ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்களை கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.

    2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது டீன் எல்கர், மார்கிராம், பவுமா, ஆலிவியர், அம்லா ஆகியோரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

    இரண்டு இன்னிங்சிலும் 10 கேட்ச் பிடித்துள்ளார். இதன்மூலம் டோனி சாதனையை முந்திய சர்பிராஸ், கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார். இதற்குமுன் கில்கிறிஸ்ட் டோனி மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் 9 கேட்ச் பிடித்துள்ளார். கில்கிறிஸ்ட் ஹாமில்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக 10 கேட்ச் பிடித்துள்ளார்.



    ஒட்டுமொத்தமாக ஒரு டெஸ்ட் போட்டியில் மார்க் டெய்லர், கில்கிறிஸ்ட், சகா, சர்பிராஸ் அகமது ஆகியோர் 10 கேட்ச் பிடித்து 2-வது இடத்திலும், ரஸல், டி வில்லியர்ஸ், ரிஷப் பந்த் 11 கேட்ச் பிடித்து முதல் இடத்தில் உள்ளனர்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. சர்பிராஸ் அகமது 56 ரன்கள் சேர்த்தார் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


    ஷான் மசூத்

    இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் முதல்நாள் நாள் மதிய உணவு இடைவேளை பாகிஸ்தான் 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டெயின், பிலாண்டர், ரபாடா, ஆலிவியர் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று நினைத்த இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


    சர்பிராஸ் அகமது

    ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். முகமது அமிர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க யாசிர் ஷா (5), முகமது அப்பாஸ் (0), ஷாஹீன் அப்ரிடி (3) அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 4 விக்கெட்டும், ஸ்டெயின் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், பிலாண்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் 75 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினாரகள்.



    இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். பாகிஸ்தான் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    தென்ஆப்ரிக்காவில் பயமின்றி தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.. #SAvPAK
    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டில் (1998 மற்றும் 2007) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்காது என்பதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பயமின்றி விளையாட வேண்டும் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘பவுன்ஸ், சீமிங் அதிக அளவில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு வீரரும் பயனமின்றி, பெரிய இதயத்தோடு வெற்றிக்காக விளையாட வேண்டும்.



    ஷபிக் மற்றும் அசார் அலியிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை. அவர்கள் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடியவர்கள். ஆகவே, நாங்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டால், சிறந்த பந்து வீச்சை குழுவை கொண்ட நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம்.

    முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    ×