search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் தொழிலாளி"

    • சமையல் தொழிலாளி- பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அருகே சிலைமானை அடுத்துள்ள புளியங்குளம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது40).சமையல் மாஸ்டரான இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. கண்ணிலும் பாதிப்பு இருந்தது.

    இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிரஞ்சீவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி யோகலட்சுமி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே எஸ்.கொடிக்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமுத்தாய் (50). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராமுத்தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கணவர் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோவிந்தன் (54). இவர் லெப்ரசி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குடிப்பழக்கமும் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தன் புது ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி வாகனம் நிறுத்துமிடம் எதிரே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவருடைய தம்பி கண்ணன் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சின்னத்துரை தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • டேனியல்ராஜ்,ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நடராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது53). தூத்துக்குடியில் சமையல் தொழி லாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது பேத்தியை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு, அருகில் இருந்த ராஜாஜி பூங்காவில் சின்னத்துரையும், அவரது மனைவி ஜெயலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். உடனடியாக சின்னத் துரை தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.இதில் திரேஸ்புரத்தை சேர்ந்த டேனியல்ராஜ் (22), டேவிஸ் புரத்தை சேர்ந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டேனியல் ராஜை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டேனியல்ராஜ் மீது தருவைகுளம், தாளமுத்துநகர், வட பாகம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    • கவுது மெய்தீன், நாகூர் மீரான் என்பவரும் சமையல் வேலைக்காக ஆத்தூருக்கு சென்றனர்.
    • தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விழுந்தது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்தவர் கவுது மெய்தீன் (வயது 39). சமையல் தொழிலாளி. இவருக்கு ராபியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது சித்தப்பாவின் மகனான நாகூர் மீரான் (30) என்ப வரும் நேற்று காலையில் சமையல் வேலைக்காக ஆத்தூருக்கு சென்றனர்.

    பின்னர் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கவுது மெய்தீன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் உச்சினி மாகாளியம்மன் கோவில் சந்திப்பு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடுமாறியது. அதே வேளையில் எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விழுந்தது. இந்த விபத்தில் கவுதுமெய்தீன், நாகூர் மீரான் ஆகிய இருவருக்கும் கண்களிலும் நெற்றியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக கவுது மைதீன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    • பலியான வேலாயுதம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குலசேகரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் பிள்ளை (வயது 62). இவர் தேரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றார். அப்போது பள்ளி யில் திடீரென வேலாயுத பிள்ளை மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக பக் கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட வேலாயுதம் பிள்ளையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து சுமதி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பலியான வேலாயுதம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    ×