சுசீந்திரம் அருகே தனியார் பள்ளியில் மயங்கி விழுந்து சமையல் தொழிலாளி பலி

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.பலியான வேலாயுதம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.
சுசீந்திரம் அருகே தனியார் பள்ளியில் மயங்கி விழுந்து சமையல் தொழிலாளி பலி
Published on

நாகர்கோவில்:

குலசேகரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் பிள்ளை (வயது 62). இவர் தேரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றார். அப்போது பள்ளி யில் திடீரென வேலாயுத பிள்ளை மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக பக் கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட வேலாயுதம் பிள்ளையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து சுமதி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பலியான வேலாயுதம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com