காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல் தொழிலாளி சாவு- உடன் சென்ற உறவினர் படுகாயம்

கவுது மெய்தீன், நாகூர் மீரான் என்பவரும் சமையல் வேலைக்காக ஆத்தூருக்கு சென்றனர்.தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விழுந்தது.
காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல் தொழிலாளி சாவு- உடன் சென்ற உறவினர் படுகாயம்
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்தவர் கவுது மெய்தீன் (வயது 39). சமையல் தொழிலாளி. இவருக்கு ராபியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது சித்தப்பாவின் மகனான நாகூர் மீரான் (30) என்ப வரும் நேற்று காலையில் சமையல் வேலைக்காக ஆத்தூருக்கு சென்றனர்.

பின்னர் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கவுது மெய்தீன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் உச்சினி மாகாளியம்மன் கோவில் சந்திப்பு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடுமாறியது. அதே வேளையில் எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விழுந்தது. இந்த விபத்தில் கவுதுமெய்தீன், நாகூர் மீரான் ஆகிய இருவருக்கும் கண்களிலும் நெற்றியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேல் சிகிச்சைக்காக கவுது மைதீன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com