search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யராஜ் மகள்"

    • கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் சேர போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன
    • இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

    கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன. சத்யராஜ் தி.க கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவரது மகள் பாஜகவில் சேர போகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், கடந்து சில மாதங்களுக்கு முன்பு ஊடகத்தில் அரசியலில் ஆர்வம் இருக்கிறது என நான் கூறிய பிறகு பலரும் எந்த கட்சியில் சேருவீர்கள்? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்பீர்களா? என பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.

    நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறேன். அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக நாங்கள் அளித்து வருகிறோம்.

    அந்த வகையில் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பாஜகவில் இருந்து வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை.

    நான் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை வரும் மக்களவை தேர்தலுக்கு பின் அறிவிப்பேன். புரட்சி தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

    ×