search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divya Sathyaraj"

    • கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் சேர போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன
    • இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

    கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன. சத்யராஜ் தி.க கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவரது மகள் பாஜகவில் சேர போகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், கடந்து சில மாதங்களுக்கு முன்பு ஊடகத்தில் அரசியலில் ஆர்வம் இருக்கிறது என நான் கூறிய பிறகு பலரும் எந்த கட்சியில் சேருவீர்கள்? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்பீர்களா? என பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.

    நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறேன். அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக நாங்கள் அளித்து வருகிறோம்.

    அந்த வகையில் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பாஜகவில் இருந்து வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை.

    நான் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை வரும் மக்களவை தேர்தலுக்கு பின் அறிவிப்பேன். புரட்சி தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம்.
    • பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி வந்தாச்சு. இன்று இரவு முதல் நாளை இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதே நேரம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது முக்கியம்.

    மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அதில் இருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

    தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதே நேரம் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம்.

    இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அழகு நிலையங்களுக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அது தவறு. எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரியும். அரிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று கருதக் கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு சரியாகி விடும். மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும். பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் சத்யராஜ் மகள் ஈடுபட்டுள்ளார்.
    • மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன.

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

    மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார்.

    அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். இந்த பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    நான் இந்த மாதம் இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறி னார்.

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் சேர்ந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #DivyaSathyaraj
    நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் ’இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே, திவ்யா சத்யராஜ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போகிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில், அதற்குப் பதில் தரும் வகையில் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார் திவ்யா சத்யராஜ். “நான் மனதளவில் கம்யூனிஸ்ட்.

    கம்யூனிஸம் தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும். எனக்கு நல்லகண்ணு அய்யாவைப் பற்றி நன்கு தெரியும். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு எளிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்.

    சாதிகளற்ற சமூகத்தின் கொள்கைகளுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடியவர்.” எனத் தெரிவித்துள்ளார். #DivyaSathyaraj

    ×