மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் 'தேசப்பற்று'- பா.ஜ.க.வுக்கு திவ்யா சத்யராஜ் கண்டனம்

மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள்.எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.
மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் 'தேசப்பற்று'- பா.ஜ.க.வுக்கு திவ்யா சத்யராஜ் கண்டனம்
Published on

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் "தேசப்பற்று". பலநூறு ஆண்டுகள் கல்வி, வேலைவாய்ப்பு முதல் சமூக, சமுதாய கட்டமைப்பில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சனாதான கும்பல் வர்ணாசிரமம் முதல் குல கல்வி வரை எம் அப்பாவி மக்களை உண்டு கொழுத்து கிடந்தார்கள்.

அவர்களுக்கு சுயமரியாதை, சமூக நீதி விழிப்புணர்வு ஏற்பட்டதும் மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள். எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது பா.ஜ.க. செய்கிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com