4 வருடங்களாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி- மகள் திவ்யா தகவல்

அவருக்கு செயற்கை குழாய் மூலம் உணவு கொடுத்து வருகிறோம். என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார்.
4 வருடங்களாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி- மகள் திவ்யா தகவல்
Published on

சென்னை:

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரது மகள் திவ்யா கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

என் அம்மா 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை குழாய் மூலம் உணவு கொடுத்து வருகிறோம். இதனால் என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார். எங்கள் அம்மா கண்டிப்பாக பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com