search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு வெடிக்கும் போது முக கவசம் அவசியம்: டாக்டர் திவ்யா சத்யராஜ் அறிவுரை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பட்டாசு வெடிக்கும் போது முக கவசம் அவசியம்: டாக்டர் திவ்யா சத்யராஜ் அறிவுரை

    • பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம்.
    • பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி வந்தாச்சு. இன்று இரவு முதல் நாளை இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதே நேரம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது முக்கியம்.

    மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அதில் இருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

    தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதே நேரம் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம்.

    இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அழகு நிலையங்களுக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அது தவறு. எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரியும். அரிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று கருதக் கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு சரியாகி விடும். மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும். பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×