search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு கொள்ளை"

    • கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணையின்போது வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் உயிர் தப்பினார்.

    இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார். இந்த வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

    தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    விசாரணையின்போது இந்த வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை நடந்த இடம் மற்றும் ஜெயலலிதாவின் அறையில் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் 8 செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்து, அதில் உள்ள விபரங்களை கொண்டு விசாரணை நடத்துவதற்காக அந்த செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த பொருட்கள் அனைத்தையும் நேற்று ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி.பி.ஐ.டி.போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே வருகிற 28-ந் தேதி ஊட்டி செசனஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அந்த சமயம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது, கொடநாடு பங்களாவில் கொள்ளை எதற்காக நடந்தது. இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    அதன் அடிப்படையில் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணையை அறிக்கையாக வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளரான நடராஜிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை பதிவும் செய்து கொண்டனர்.

    செல்போன்களை விசாரணைக்கு கேட்டது, கொடநாடு பங்களாவில் கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை கோர்ட்டில் ஒப்படைத்தது என அடுத்தடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் யார் யாரிடம் விசாரணை நடந்தது, புதிதாக யாரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளதா? என்ற தகவல்கள் தெரியவரும்.

    • கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
    • கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    நீலகிரி:

    கொலை, கொள்ளை நடந்த கொடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, ஸ்டோர் ரூமில் இருந்து சில பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கைப்பற்றப்பட்ட பொருட்கள் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    • ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது.
    • ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, மகள் இறந்தனர்.

    தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இந்த வழக்கில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக தமிழக அரசு மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்தது.

    ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர். சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டிலும் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர்.

    மேலும் இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நட்ராஜ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் என 300-க்கும் மேற்பட்டோரிடம் தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிறப்பு பிரிவினர் கொடநாடு வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதனால் அங்கு மாயமான பொருட்கள் என்ன? கொள்ளை சம்பவம் குறித்து ஏதாவது தெரியுமா? என்பது குறித்து கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வகையில் ஆறுக்குட்டியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்து போன கனகராஜ் குறித்த முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

    2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கனகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்து விட்டு, 2 பிரிவாக பிரிந்து சென்று விட்டனர். கனகராஜ் நேராக தனது சொந்த ஊரான சேலம் எடப்பாடிக்கு சென்று விட்டார்.

    கொள்ளை சம்பவம் நடந்த 4 நாட்கள் கழித்து விபத்து நடந்த அன்று காலை கனகராஜ், தனது மனைவியுடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.

    ஜோதிடரிடம் தனது ஜாதகத்தை கொடுத்து தனக்கு நேரம் எப்படி இருக்கிறது. பிரச்சினைகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதனை ஆராய்ந்த ஜோதிடர், கனகராஜிடம், உனக்கு இன்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது.

    அதனை மட்டும் கடந்து விட்டால் உன்னை எதுவும் நெருங்காது என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த அன்றைய தினம் இரவே கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    இந்த தகவல்களின் அடிப்படையில் கனகராஜ் சந்தித்த ஜோதிடர் யார் என்பது குறித்து விசாரித்தனர். தற்போது அவர் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவரின் பெயர், விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    அவர் விசாரணைக்கு ஆஜராகும் போது, கனகராஜ் ஜாதகம் மட்டும் பார்த்தாரா? அல்லது வேறு ஏதாவது தகவல்களை உங்களிடம் தெரிவித்தாரா? கனகராஜூக்கு ஆபத்து இருப்பது எப்படி தெரியும் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கனகராஜ் தான். ஆனால் அவரும் இப்போது உயிருடன் இல்லை. இதனால் இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார் என்பதே சி.பி.சிஐ.டி போலீசாரின் தேடுதலாக உள்ளது. தொடர்ந்து அதனை நோக்கி பயணித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 20-ந் தேதி, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த உதவி கமிஷனர் கனகராஜிடமும் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.
    • எடப்பாடியின் முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் யாருமே எளிதில் நெருங்க முடியாத இடமாக இருந்த கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியான உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    உதவி கமிஷனர் கனகராஜின் வீடு சென்னை மந்தைவெளியில் உள்ள சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் உள்ளது.

    அங்குள்ள வீட்டுக்கு இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சென்றனர்.

    கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியான முருகவேல் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி வரும் நிலையில்தான் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

    காலை 7.30 மணியில் இருந்து 10 மணி வரையில் உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.

    இதன்படி அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மேலும் பலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு வசதியாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் மூலம் கொடநாடு வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் கொடநாடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

    • கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • கொடநாடு வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் வழக்கானது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மணிகண்டன், கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேருக்கு சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர். இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதனை ஏற்று இன்று 3 பேரும் கோவை காந்தி புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் கொடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கொடநாடு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பது சம்பந்தமாகவும், வழக்கு குறித்தும் விசாரித்தனர்.

    இவர்கள் 3 பேர் தவிர கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜேஷ், வினோத் ஆகிய 3 பேரும் இன்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கொடநாடு வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் வழக்கானது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நேற்று ஊட்டி பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களாக கூறப்படும் சயான், வாளையாா் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சமி ஆகியோா் ஆஜராகினா். மேலும் அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை ஆகியோா் ஆஜராகினா்.

    விசாரணையின்போது, தொலைத்தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் கோரப்பட்டது.

    இதனை ஏற்ற மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், வழக்கை பிப்ரவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

    இது தொடர்பாக அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த எஸ்.பி.முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழக்கின் விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை, அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் அடுத்த கட்ட விசாரணை பற்றியும், அடுத்து யாருக்கு எல்லாம் சம்மன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், குன்னூர் டி.எஸ்.பி. ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
    • வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதன்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ்சாமி ஆகிய 6 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆஜரானார்.

    இதையடுத்து அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.

    இதை ஏற்று வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.சி.ஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பா விசாரணைக்காக ஆஜராவார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

    இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறு விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படையினர் சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.சி.ஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் அவர் விசாரணைக்காக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2017-ல் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர், சி.பி.ஐ-யில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சி.பி.ஐ தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு புலனாய்வுத்துறை அனுப்பியுள்ளது.

    • காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது.
    • அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தி வந்தனர். இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி தலைமையிலான ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் கடந்த 26-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில், 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

    அப்போது காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது. அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    கொடநாடு வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சாட்சிகளை கலைத்தது போல் அந்த மரத்தை எஸ்டேட் ஊழியர்கள் வெட்டி உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதா என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, வனத்தில் வெட்டப்படும் மரங்கள் குறித்து வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். கொடநாட்டில் மரம் வெட்டப்பட்டதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சில தினங்களுக்கு முன்பு கூட கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • காவலாளி கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்தும்போது இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது கொள்ளை சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஒம்பகதூர் மற்றும் கிருஷ்ணதபா தடுக்க முயன்றனர்.

    இதில் ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணதபா படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படையினர் மறுவிசாரணை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., டிஜி.பி ஷகில் அக்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி விட்டனர். சில தினங்களுக்கு முன்பு கூட கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புகார்தாரரான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணதபா தற்போது நேபாளத்தில் வசித்து வருகிறார். அவரை நீலகிரி அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேபாளத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    காவலாளி கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்தும்போது இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள்.

    ஊட்டி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் பல மர்மங்கள் இருந்ததால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    தனிப்படை போலீசார் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எஸ்டேட் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் திரும்ப வருவோம், எனவே ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர் காரில் ஊட்டி செல்கிறார்.

    அங்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அவரே நேரடி விசாரணையில் இறங்க உள்ளார். அப்போது எஸ்டேட்டுக்கும் நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்துவார் என தெரிகிறது.

    சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் கொடநாடு வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

    கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீசார் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தொடங்கினர்.

    முதற்கட்டமாக நேற்று சசிகலா உள்பட 326 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் 1500 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது பெறப்பட்ட பதிவுகள், ஆவணங்கள், வாக்குமூல விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்தநிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    அவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விட்டு இன்னும் ஒரு சில தினங்களில் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்க உள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டும் என தெரிகிறது.

    ×