search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள்"

    • சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
    • 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.

    மேட்டுப்பாளையம்

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு கோவை செல்லும் வழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை சாதி, மத பேதமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டு ஆயுள் சிறைவாசிகளுக்காக உரிமை குரலை முழக்கம் இடமுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் மக்களை சந்தித்து வருகின்றோம்.

    இதே கோரிக்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 8 -ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்த போது தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை பற்றி விவாதித்து முடிவெடுத்து பரிசீலனை பெறுவதற்காக நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைத்தது. 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.

    நாங்கள் பதிவு தபாலில் அனுப்பி வைத்த கோரிக்கை மனு கூட இந்த முகவரியில் அலுவலகம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜாபர், பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அசார், துணைச் செயலாளர் ஜாபர் அலி, காஜாமைதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • முகாம் சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.

    திருச்சி,

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கான முகாமில் அதிக அளவில் செல்போன் பயன்பாடு மற்றும் போதை பொருட்கள் புழங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் மீண்டும் முகாம் சிறையில் தங்கியுள்ள 156 பேரில் பெரும்பாலானவர்கள் செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கூர்மையான ஆயுதங்களும் அவர் பதுக்கி வைத்திருப்பதாக வெளியான தகவலின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் செல்போனை மீண்டும் தரக்கோரி கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×