search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேக்"

    • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • இன்று பிளம் கேக் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    மைதா - 100 கிராம்

    பட்டர் - 100 கிராம்

    சர்க்கரை - 100 கிராம்

    கார்ன் பிளார் - 2 ஸ்பூன்

    ஓமம் தூள் - அரை ஸ்பூன்

    திராட்சை - 30 கிராம்

    சுக்குத் தூள் - அரை ஸ்பூன்

    பால் - கால் கப்

    முந்திரி, பிஸ்தா, வால்நட்- விருப்பத்திற்கேற்ப

    செர்ரி பழம் - 50 கிராம்

    செய்முறை:

    சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கார்ன் பிளாரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .

    பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கூழ் போன்று காய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பாலினை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதில் உருகிய பட்டர் சேர்த்து சாஃப்டாக பிசைய வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். பின் முட்டையை மைதா மற்றும் சர்க்கரை கலவையில் ஊற்றி மீண்டும் பிசைய வேண்டும்.

    பின் இந்த கலவையை பாலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.

    வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி மீதி மீதி கலவையை ஊற்ற வேண்டும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும்.

    ப்ரீ ஹீட் செய்து கொண்ட ஓவனில் கேக் டின்னை வைத்து சுமார் நாற்பது நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக்" ரெடி.

    • ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் உலகக் கால்பந்து கோப்பை வடிவில் ஆளுயர கேக் உருவாக்கியுள்ளனர்.
    • ஏராளமானோர் கேக் முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    ராமநாதபுரம்

    உலக கோப்பை கால்பந்து திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பில் இளைஞர்க ளிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் உலகக் கால்பந்து கோப்பை வடிவ கேக்கை ஆளுயரத்தில் உருவாக்கியுள்ளனர்.

    60 கிலோ சர்க்கரை‌, 260 முட்டைகள் கொண்டு 5½ அடி உயரத்தில் இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஐஸ்வர்யா பேக்கரிஸ் உரிமையாளர் வெங்கடசுப்பு தெரிவித்தார்.

    வடிவமைக்கப்பட்ட கேக் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரியில் வாடிக்கை யாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் கேக் முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    • 'கிரேப்' என்பது பல மெல்லிய பான் கேக்குகளை ஒன்றாக அடுக்கி செய்யப்படும் கேக் வகையாகும்.
    • இனிப்பு சுவைக் கொண்ட 'வாழைப்பழ கிரேப் கேக்' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 4

    முட்டை - 2

    எண்ணெய் - 4 தேக்கரண்டி

    உப்பு - ¼ தேக்கரண்டி

    மைதா மாவு - 250 கிராம்

    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    கோகோ பவுடர் - 5 கிராம்

    கெட்டியாக காய்ச்சிய பால் - 250 மில்லி

    பிரெஷ் கிரீம் - 250 மில்லி

    சர்க்கரை - 25 கிராம்

    சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு

    செய்முறை

    * நன்றாகப் பழுத்த 2 வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கொட்டி சலித்துக்கொள்ளவும்.

    * முட்டைக் கலவையில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பின்பு அந்தக் கலவையில் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும்.

    * அதனை மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

    * பிறகு நான்-ஸ்டிக் தவாவில், சிறு சிறு அடைகளாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை சேர்த்து, எக் பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை 'பீட்' செய்யவும்.

    * வாழைப்பழ அடையின் மேல், தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழத்தை வைக்கவும்.

    * பின்னர் மீண்டும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும்.

    * இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ அடைகளை அடுக்கவும்.

    * பின்பு அந்த அடுக்கின் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி அலங்கரிக்கவும்.

    * இப்பொழுது சுவையான 'பனானா கிரேப் கேக்' தயார்.

    ×