search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூரியர்"

    • கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    • அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம் பாளையம் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    நேற்று கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் நேற்று பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தில் உள்ள அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடினார். பின்னர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கும், நாமக்கல் தீயணைப்பு துறையி னருக்கும் தகவல் கொடுத் துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுழலில் சிக்கி ராஜவாய்க் காலில் இறந்து போன கார்த்திகேயனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதன்மூலம் கஞ்சா விற்பனை
    • கஞ்சா புழக்கத்தின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குளச்சல், கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் கஞ்சா விற்பனை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா விற்பவர்களின் வங்கி கணக்குகளையும் போலீ சார் முடக்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ராஜாக்கமங்கலம் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலமாக கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கூரியர் நிறுவ னங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கஞ்சா விற்பனை செய்யும் கும்பல், வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதன்மூலம் கஞ்சா விற்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கூரியர் நிறுவனங்களுக்கு வரும் பார்சல்களை சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்க வேண்டும் என்று கூரியர் நிறுவனங்க ளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூரியர் நிறுவனம் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஆம்னிபஸ் உரிமையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அவர்களை உடனடியாக போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்க வேண்டும். பஸ் மற்றும் கூரியரில் பார்சல் அனுப்புபவர்களின் ஆவண நகலை பெற்றுக் கொண்டே அனுப்ப வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கஞ்சா விற்பனையில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூரியர் மூலமாக கஞ்சாவை வரவழைத்து விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர் ஆசாமிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர் . கஞ்சா புழக்கத்தின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.எனவே கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    • பார்சல்களை சோதனை செய்து எடுக்க வேண்டும்
    • குமரி. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தலைமையிலான போலீசார் நெசவாளர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த மேல ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 20), ராமன்புதூர் நாஞ்சில் நகரைச் சேர்ந்த தீபு(19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வீரமணி, தீபு இருவரையும் கைது செய்தனர்.

    இதேபோல் ராஜா க்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் எறும்புகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அங்கு நின்று கொண்டி ருந்த ஆசாரி பள்ளத்தை சேர்ந்த ஜெனிஸ் (24), எறும்புகாட்டைச் சேர்ந்த வினோத்(28), மேலரா மன்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் செல்போன், 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்ய ப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தியபோது கூரியர் நிறுவனம் மூலமாக வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இவர்க ளுக்கு வந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் ஹைதராபாத்திலிருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமை யிலான போலீசார் அந்த கூரியர் நிறுவனத்திற்குச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து பஸ்கள் மற்றும் ெரயில்களில் கொண்டுவரப்படும் கஞ்சாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூரியர் பார்சல் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கூரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களை அனுப்பு ம்போது அனுப்புனர், பெறுநர், முகவரி சான்று, செல்போன் எண் போன்றவை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும்.

    முறையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். முகவரி சான்று இல்லாமல் பார்சல்களை அனுப்பவோ, வினியோகம் செய்யவோ கூடாது.

    பார்சல்கள் அனுப்பும் போது சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை செய்த பிறகே பார்சலை அனுப்ப வேண்டும்.

    விதிமுறைகளை கடை பிடிக்காத கூரியர் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து அலுவலகங்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்ப ட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×