search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டமைப்பு"

    • ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மனு
    • 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 51 பேரூராட்சிகளில் 46 பேரூராட்சி தலைவர்கள் சேர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் டெண்டரை ரத்து செய்ய வேண்டும், அமர்வுப்படி உயர்த்தி தர வேண்டும், உள் குடிநீர் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து ரூ.10 லட்சம் வரை தளர்வு தரப்படும் என்றும், பேரூராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி ரூ.10 ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் தருவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததாக பேரூராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சி கூட்டமைப்புகளின் தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜாண் டென்சிங், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, நல்லூர் பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் உட்பட 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    • கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மகுடம் சக்தி, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையம் டிராய் அமைப்பு என்.டி.ஓ.3 பரிந்துரையின் பேரில் கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கேபிள் டி.வி.கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்களும், கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தலையிட்டு என்.டி.ஓ.3 பரிந்துரையை நிறுத்திவைத்து கேபிள் டி.வி.கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் இந்திய தொலைதொடர்பு ஆணையம் கொண்டுவரும் பரிந்துரையை பொதுமக்களும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா? என்று மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி நலவாரியம் அறிவித்திட வேண்டும், அரசு கேபிள் அனலாக் நிலுவை தட வாடகை குறித்து கூட்ட மைப்பு தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    • உலக அமைதிக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள நேட்டோ கூட்டமைப்பை உடனே கலைக்க வேண்டும்.
    • மனித உரிமைகளையும், தொழிலாளர் உரிமைக ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் ஏ .ஐ. டி. யூ. சி தொழிற்சங்கம் சார்பில் உலக அமைதி நாள் கடைபிடிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    நிகழ்வில்உலக அமைதிக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள நேட்டோ கூட்டமைப்பை உடனே கலைக்க வேண்டும், ரஷ்யா-உக்ரைன் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போர் இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்குவோம், மனித உரிமைகளையும், தொழிலாளர் உரிமைக ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, துணைச் செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி கஸ்தூரி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கட்டுமான சங்க துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×