search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு கூட்டம்"

    • கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர்.
    • மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் அரசனட்டி ரவி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில், குழு உறுப்பினர்கள் எம். அசோகா, எச். ஸ்ரீதரன், ரஜினிகாந்த், சீனிவாசலு, கிருஷ்ணப்பா, மாரக்கா, மம்தா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    சீனிவாசலு (தி.மு.க): 8-வது வார்டு கவுன்சிலர்: எனது வார்டுக்குட்பட்ட திருப்பதி நகரில் 50 மீட்டர் பைப்போட்டுத்தர 4 மாதமாக கேட்டு வருகிறேன்.நடவடிக்கையே இல்லை. சின்ன, சின்ன வேலைகளை முடித்து தரக்கூட மெத்தனம் காட்டப்படுகிறது. அடுத்த மண்டல கூட்டத்திற்கு முன்பு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும்.

    மாரக்கா: 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்:

    பணிகள் எதுவும் நடைபெறாததால், வார்டு மக்களின் முகத்தில் முழிக்கவே முடியவில்லை". இவ்வாறாக கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன், "மாநகராட்சி பகுதிகளில் 439 பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓசூர் மாநகராட்சிக்குட்ட அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான தெரு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலேயே, குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஓசூரில் சாலைகள் மிகவும் மோசம் என்ற தோற்றம் உருவாகி வருகிறது, இதற்கு தனி கவனம் செலுத்தி உடனுக்குடன் சீரமைத்து குண்டும் குழியுமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், அவசரமான பணிகளை முடித்து தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இதில், நகர் நல அலுவலர் அஜிதா, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், மற்றும் அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வைக்கப்பட்ட 24 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    • கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டடங்கள் சீரமைப்பு பணி 90 நாட்களில் முடிக்கப்படவேண்டும்.
    • 9 மாதம் ஆகியும் இன்னும் பணியை முடிக்கவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் தேன்மொழி தலைமையில் ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்துகொண்டு ஒன்றிய குழு உறுப்பினர் ரவி (மதிமுக) பேசுகையில்:- கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டடங்கள் சீரமைப்பு பணி 90 நாட்களில் முடிக்கப்படவேண்டும். 90 நாட்களில்சீரமைப்பு பணி முடிப்பதாக கூறி வேலை எடுத்த ஒப்பந்ததாரர் 9 மாதம் ஆகியும் இன்னும் பணியை முடிக்கவில்லை. அவருக்கு புதியதாக எந்த வேலையும் கொடுக்கக்கூடாது.மேலும் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதனால் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்துள்ளது. அருள்புரம் முதல் உப்பிலிபாளையம் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்காக அந்த சாலையில் சர்வே செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துமனையில் காலியாக உள்ள சமையலர், தூய்மை பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    மங்கையர்கரசி ( அதிமுக): பருவாய், காரணம்பேட்டை பகுதியில் கல்குவாரி தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் நல்ல வருமாணம் கிடைத்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாலசுப்பிரமணியம்( துணைத்தலைவர்): அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை புதுப்பித்து கிராம மக்கள் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இரண்டரை கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளது என்றார்.

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் அடிப்படை வசதிகளை விரைவாக செயல்படுத்துவது உள்பட 15 தீர்மானங்கள் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் அதிகாரிகளை சேர்மன் கேட்டுக்கொண்டார்.

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.
    • ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

    • சீராப்பள்ளி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
    • கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள், துணைத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கோமதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குழந்தைகளின் திருமணங்கள், குழந்தைகள் தத்தெடுக்கும் முறை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக்குதல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், இளம் வயது குழந்தை திருமணம் தடுத்தல், கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×