search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்குமார் பேசிய காட்சி. அருகில் துணை சேர்மன் ஜீவிதா ஜவகர் உள்ளார்.   

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் அடிப்படை வசதிகளை விரைவாக செயல்படுத்துவது உள்பட 15 தீர்மானங்கள் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் அதிகாரிகளை சேர்மன் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×