search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதித்து"

    • குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கர ளவாடி தேவி நகரை சேர்ந்த வர் பசுவராஜ் (60). திருமண மாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் லிங்கண்ணா (32). கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வேலைக்கு செல்லா மல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

    பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர். ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.

    இது குறித்து சத்திய மங்கலம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடிலிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர் பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை.
    • சென்னை–யிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் லூசியா. இவரது மகள் மரியா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.

    ரூ.2 கோடிக்கு காப்பீட்டு

    இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் . அதில், எனது மகளை வரதட்சனை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் சூசைராஜி, வேலை கிடைத்தது.

    அங்கு செல்லும் முன் எனது மகள் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். என் மகள் இறந்து விட்டதாக இம்மாதம் 3-ம் தேதி தெரிவித்தார் இயற்கையான முறையில் அவர் இறக்கவில்லை. ஆகவே எனது மகள் சாவில் மர்மம் உள்ளதால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மரியாவின் கணவர் சூசைராஜ் நேரில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார். அதன்படி அவர் நேற்று ஆஜராகி மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி அப்துல் குத்தூஸ் சேலம் அரசு மருத்துவமனையில் மரியா உடல் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். டாக்டர்கள் குழுவை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் நியமித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு போலீசருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் நகலை மனுதாரருக்கும், சூசைராஜுக்கும் வழங்க வேண்டும், கணவர் முன்னிலையில் இறுதி சடங்கிற்காக உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    நடவடிக்கை

    இதையடுத்து சென்னை–யிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி, அதன் அறிக்கையின் அடிப்படையில் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×