search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் தடுப்பு"

    • அரிசி கடத்தலில் ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை தலைவர் ஜோசி உத்தரவுப்படி கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி, ஈரோடு சரக டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் சம்பவத்தன்று காரில் 2 டன் ரேஷன் அரிசியை விற்பனை க்காக கடத்தி சென்றதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சக்திவேல் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலைமையில் உள்ளன.

    இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    • கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து நிலுவையில் உள்ளன.
    • கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்து வதிலும், ரவுடிகளை கண்காணித்து கைது செய்து குற்றங்களை தடுப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.

    கடந்த 3-ந்தேதி ராமநாதபுரம் நீதிமன்றத்திற்குள் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்ட ரவுடியை மற்றொரு ரவுடி நீதிபதியின் இருக்கை முன்பு வெட்டிய சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

    போலீசார் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 35 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து கலெக்டரின் ஒப்பு தல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.

    கடந்த ஆண்டு வரை மட்டும் 22பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதில் 2பேர் மட்டுமே குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வழக்கில் 11பேர் மீதும், போக்சோ வழக்கில் ஒருவர், கஞ்சா வழக்கில் 5பேர், திருட்டு வழக்கில் 3பேர் என்ன 22பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் இதில் இருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    மேலும் இந்த ஆண்டு மட்டும் சட்டம் ஒழுங்கில் 13 பேர், திருட்டு வழக்கில் 2பேர் மீதும் போக்சோ வழக்கில் ஒருவர் என 16பேர் மீது குண்டாஸ் கோப்பு கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையடுத்து 2022 ஜூன் முதல் இதுவரை 38 கோப்புகளில் 35 பேர் மீது குண்டாஸ் வழக்கு கோப்புகள் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் குற்றங்களை செய்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் உலா வருவதாகவும், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்ப தாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைத்து குண்டாஸ் கோப்புகளும் கோட்டாட்சியர் விசாரணை யில் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது பதியப்படும் வழக்கு கோப்புகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதால் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகின்றனர் என்றும், ஆகவே குண்டாஸ் வழக்கு கோப்புகள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் திருட்டில் ஈடுபட்டனர்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என் கிறசசிகுமார் (வயது 46), திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சின்னநோம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாடு ரமேஷ் (51) ஆகிய இருவரையும் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து சிறையில் அடைத்தார்.

    மேலும் இவர்களின் குற்ற ச்செயல்களை கட்டுப்ப டுத்தும் பொருட்டு, ராணிப் பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தர விட்டார்.

    ×