search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fell on the teenager"

    • அரிசி கடத்தலில் ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை தலைவர் ஜோசி உத்தரவுப்படி கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி, ஈரோடு சரக டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் சம்பவத்தன்று காரில் 2 டன் ரேஷன் அரிசியை விற்பனை க்காக கடத்தி சென்றதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சக்திவேல் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலைமையில் உள்ளன.

    இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    ×