search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிமியா"

    ரஷியாவின் கிரிமியா பகுதியில் சமீபத்தில் இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்தனர். காணாமல்போன 6 இந்தியர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Kerchstrait #Shipaccident #Indiansailorskilled
    கிரிமியா:

    ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரிமியா பகுதியில் கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரிமியா பகுதி முன்னர் உக்ரைனில் இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது.

    கிரிமியா பகுதியில் உள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் இரு சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் கியாஸ் டேங்கர் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

    அப்போது திடீரென கியாஸ் டேங்கரில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ இரு கப்பல்களுக்கும் பரவியது. விபத்தை சந்தித்த இரு கப்பல்களில் ஒன்றில் 8 இந்தியர்கள் உள்பட 17 பணியாளர்கள் இருந்தனர். மற்றொரு கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 15 பணியாளர்கள் இருந்தனர்.  

    இவ்விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் ரஷிய கடற்படையை சேர்ந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கப்பல் பணியாளர்களில் 12 பேர் மட்டுமே உயிருடன்  மீட்கப்பட்டனர். இதுவரை 14 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

    இறந்த இந்தியர்களின் பெயர் விபரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பினல் குமார் பாரத்பாய் டான்டெல், விக்ரம் சிங், சரவணன் நாகராஜன், விஷால் டோட், ராஜா தேவநாராயண் பானிகிரஹி, கரண்குமார் ஹரிபாய் டான்டெல் ஆகியோர் இவ்விபத்தில் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், காணாமல் போன 6 இந்தியர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kerchstrait #Shipaccident #Indiansailorskilled
    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். #UkraineMartialLaw #Crimea
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது.
     
    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து அசோவ் கடற்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.


    இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு மாத காலம் இந்த சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாட்டின் எல்லை பிராந்தியங்களில் அமலில் உள்ள ராணுவச் சட்டம் இன்றுடன் (புதன்) முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நேற்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பான அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். #UkraineMartialLaw #Crimea #UkrainePresident
    உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #Ukraineconflict #UkraineWar #Putin
    பியுனஸ் அய்ரெஸ்:

    உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

    இந்த பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷியா தெரிவித்தது.


    இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் அய்ரெஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதின், 'ரஷியா-உக்ரைன் இடையில் நீண்டுவரும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் அந்நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடரும்’ என்று தெரிவித்தார்.  #Ukraineconflict #UkraineWar #Putin
    பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict
    கீய்வ்:

    உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.


    இந்நிலையில், இந்த பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict 
    ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko
    மாஸ்கோ:

    கடந்த காலத்தில் ரஷியாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன.

    பின்னர் அந்த நாடுகள் ரஷியாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடு உக்ரைன்.

    பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷியா வலுக்கட்டாயமாக கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது.

    அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மிகவும் அதிகரித்தது.

    இந்த நிலையில் ரஷிய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷியா சிறை பிடித்துள்ளது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

    பதிலுக்கு ரஷியாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதட்டம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ கூறும் போது, உக்ரைன் கடுமையான மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

    தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌ஷயம் அல்ல. ரஷியா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.

    எனவே, ரஷியாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

    தங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டு கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் இதுபற்றி கூறும் போது, உக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு அதிபர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என்று கூறியும் நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko
    கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. #Crimea #RussiaSeizesShips
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள், அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அதிபர் புதின் பிறப்பித்த ஆணை செல்லாது என்று உக்ரைனும் அறிவித்தது. அதன்பின்னர் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்துள்ளது. 


    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறந்து கண்காணித்தபடி உள்ளது.

    உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Crimea #RussiaSeizesShips
    கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை.

    ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையும், கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதில் 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் என அமெரிக்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘கிரிமியாவை தங்கள் நாட்டுடன் ரஷியா இணைத்து கொண்டதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. எனவே, கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும்வரை ரஷியா மீதான பொருளாதார தடைகளை விலக்கிகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

    1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.

    கிரிமியாவை ரஷியா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லாது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் எல்சென்கோ தெரிவித்துள்ளார்.

    உக்ரைனில் இருந்து கிரிமியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்க நடைபெற்ற போரில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியான நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே குரல் எழுப்பி வந்துள்ளது நினைவிருக்கலாம். #Crimea annexation #WhiteHouse
    ×